மேட்டுப்பாளையம், குன்னூர் மலை ரயில் பாதையில் அடர்லி, ஹில் குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் இன்று ஒரு நாள் மட்டும் மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் குன்னூருகு மலை ரயில் போக்குவரத்து இயக்க பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை ரயில் தண்டவாளத்தில் பல்சக்கரத்தால் ரயில் பெட்டிகளை இழுத்து செல்வதுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள்ளும், மலை முகடுகள், பாறை குகைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ரயில் பாதையில் பயணிப்பதால் இந்த ரயிலில் பயணம் செய்து இயற்கை அழகினை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் முன்பதிவு செய்து காத்திருந்து பயணித்து வருகின்றனர்.
கொங்கு மண்டலத்தில் கொட்டப் போகும் கனமழை! 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
இந்த நிலையில் மழை காலங்களில் இந்த மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்து தண்டவாளங்கள் சேதமடைவது வழக்கம். இந்நிலையில் மலை ரயில் பாதை அமைந்துள்ள ஹில்கிரோ ஆடர்லி இடையே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ரயில் தண்டவாளம் சேதமடைந்தது.
பிரதமர் உண்மை கிலோ என்ன விலை என்று கேட்பார் என்று தோன்றுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆங்காங்கே ஏற்பட்டுள்ள மண் சரிவு மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய நேரமெடுக்கும் என்பதால் இன்று ஒரு நாள் மட்டும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் முன்பதிவு செய்த பயணிகள் தங்கள் பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.