பேருந்தில் அடிபட்ட நபரின் உயிரை காப்பாற்றாமல், ஓட்டுநரும், நடத்துனரும் அடிபட்ட நபரை சாலை ஓரம் அப்புறப்படுத்திவிட்டு, தப்பிச் சென்றனர். பதிவான சிசிடிவி காட்சி மூலம் காவல்துறை ஓட்டுனரை கைது செய்துள்ளது.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு கடந்த 13ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் ஒருவர் உடலில் ரத்த காயங்களுடன் சாலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் மணிகண்டன், உதவி ஆய்வாளர் குரு சந்திர வடிவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அடிபட்ட இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது பேருந்து ஒன்று அவர் மீது ஏறி இறங்கும் சிசிடிவி கேமரா காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தது. இதை அடுத்து அந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அடையாளம் தெரியாத நபர் மீது ஏறி இறங்கிய பேருந்து சாம் டிராவல்ஸ் என்பதும் அந்த பேருந்து தினசரி பெங்களூரில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்டு வந்ததும் தெரிய வந்தது.
மதுரையில் பெய்த கனமழையால் வீட்டின் மேல் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி காவல்துறை விசாரணை
இதை அடுத்து பேருந்து ஓட்டுனர் சிவராஜை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பேருந்து அந்த நபர் மீது ஏறி இறங்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டு இருந்த அந்த வாலிபரை ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் தூக்கி சென்று சாலையோரம் வைத்துவிட்டு தப்பி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.