கோவையில் திடீரென பாலத்தில் இருந்து ஆர்ப்பரித்த அருவி; வியந்து பார்க்கும் பொதுமக்கள்

By Velmurugan sFirst Published May 16, 2024, 1:02 PM IST
Highlights

கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகேயுள்ள பாலத்தில் இருந்து அருவி போல தண்ணீர் கொட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாநகர் மற்றும் புறநகரில் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த  மழை  பெய்தது. காற்று, இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்த நிலையில்  சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் இருந்து மழை நீர்  திடீரென அருவி போல் கீழே கொட்டியது. 

Latest Videos

இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இதை அவ்வழியே சென்றவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில்,  பாலத்தில் இருந்து தண்ணீர் கொட்டும் காட்சிகள் வைரலாகி வருகின்றது. பாலத்தின் மேல் இருந்து திடீரென மழைநீர் கொட்டியதால் மேம்பாலத்திற்கு கீழே இருசக்கர வாகனங்களில் நின்றுகொண்டு இருந்த வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

வைகாசி விசாக திருவிழா; பழனி ஆண்டவர் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடக்கம்

பொதுவாக மேம்பாலங்கள், பாலங்களில் மழை காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க குறிப்பிட்ட இடைவெளியில் (சுமார் 20 முதல் 30 அடி) நீர் வெளியேற்றும் குழாய்களை அமைப்பது வழக்கம். ஆனால் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தில் அது முறையாக இல்லாத காரணத்தால் தண்ணீர் குளம் போல் தேங்கி, தாழ்வான பகுதிக்கு மொத்தமாக வந்து ஒரே இடத்தில் மழை நீர் கொட்டுவதால் பார்ப்பதற்கு அருவி போல் கட்சி அளிக்கின்றது. இதனை வியப்புடன் பார்க்கும் பொது மக்கள் ஆட்சியாளர்களின் திட்டமிடலை எண்ணி முனுமுனுத்தபடி செல்கின்றனர்.

click me!