ஆட்டோக்காரன்; டெலிவரி பாய் என ஒரு ஆள் விடாம சண்டை... நடிகை நயன்தாரா அபார்ட்மெண்டையே காலி செய்தது இதனால் தானா?

First Published Jun 11, 2024, 9:33 AM IST

நடிகை நயன்தாரா அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் போது ஆட்டோக்காரன் மற்றும் உணவு டெலிவரி செய்யும் நபரிடம் சண்டை போட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Nayanthara

கோலிவுட்டில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சுமார் 7 ஆண்டுகள் உருகி உருகி காதலித்த இந்த ஜோடி, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வில் இணைந்தது. திருமணத்துக்கு பின்னர் விக்கி - நயன் ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. வாடகைத் தாய் மூலம் அவர்கள் இந்த குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். அந்த குழந்தைகளுக்கு உயிர், உலக் என பெயரிட்டு உள்ளனர்.

nayanthara, vignesh shivan

குழந்தை பிறந்த பின்னரும் சினிமாவில் நடித்து வரும் நயன்தாரா, எவ்வளவு பிசியாக இருந்தாலும் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட தவறுவதில்லை. அண்மையில் கூட குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு சீனாவுக்கு சுற்றுலா சென்றிருந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி, அங்கு தங்களது இரண்டாவது திருமண நாளையும் கொண்டாடினர். இந்த நிலையில் நடிகை நயன்தாரா பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்றை வலைப்பேச்சு அந்தணன் கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்...  மெளன ராகம் ஹிட்டான பின் மணிரத்னம் கொடுத்த மாஸ்டர் பீஸ் பட வாய்ப்பு.. நடிக்கவே மாட்டேன்னு ரிஜெக்ட் பண்ணிய மோகன்

Nayanthara son

அதன்படி, நடிகை நயன்தாரா, சென்னை எழும்பூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தபோது, அங்கு தன் மகன்களுடன் விளையாடுவதற்காக கீழே அழைத்து வருவாராம். அப்படி ஒரு முறை அழைத்து வந்தபோது, அங்கு ஒரு ஆட்டோ ஓட்டுனர் சவாரிக்காக வந்திருக்கிறார். அப்போது குழந்தைகள் விளையாடும் பகுதியில் ஏன் இவ்வளவு ஸ்பீடா வர்றீங்க என கேட்டு சண்டை போட்டுள்ளாராம் நடிகை நயன்தாரா.

Nayanthara twin babies

அதுமட்டுமின்றி ஒரு முறை உணவு டெலிவரி செய்யவந்த நபர் ஒருவர் தான் டெலிவரி செய்ய வந்த நபரிடம் போனில் சத்தமாக பேசிக்கொண்டிருந்தாராம். அவரிடமும் ஏன் இப்படி சத்தமா பேசுறீங்க குழந்தைகளுக்கு டிஸ்டர்ப் ஆகும்லனு சண்டை போட்டதாக அந்தணன் கூறி இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் தாய் பாசத்துல நயன்தாரா இப்படியெல்லாம் செய்கிறாரா என ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு என எதிர்மறை கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.

nayanthara sons uyir and ulag

ஆனால் தற்போது நடிகை நயன்தாரா சென்னை போயஸ் கார்டனில் தனியாக பிரம்மாண்ட பங்களா கட்டி அங்கு குடியேறிவிட்டார். அந்தணன் சொல்வதை பார்த்தால் ஒருவேளை அபார்ட்மெண்டில் இப்படி அடிக்கடி சண்டை சச்சரவுகள் வந்ததால் தான் நடிகை நயன்தாரா, அங்கிருந்து காலி செய்துவிட்டாரா என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்...  நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு சித்தி ராதிகாவுடன் சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்த வரலட்சுமி! வைரல் போட்டோஸ்!

Latest Videos

click me!