திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிசய நிகழ்வு.. தானாக பால் சுரந்த பசு.. கேன்களில் பிடித்து சென்ற பக்தர்கள்.!

First Published Oct 1, 2023, 11:56 AM IST

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் வளாகத்தில் சுற்றித்திரிந்த பசு மாட்டில் பால் திடீரென தானாகவே வெளியேறியதால், பாலை பக்தர்கள் கேன்களில் பிடித்துச் சென்றனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில். சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் வெளியூரில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். 

இதில் குறிப்பாக குலம் அபிவிருத்தியடை பசு மாட்டை கோ தானமாக கோவிலுக்கு கொடுப்பது வழக்கம். இதற்கு கோவில் நிர்வாகத்திடம் ரூ. 1000 கட்டணம் செலுத்தி ரசீது பெற வேண்டும். இதனால் ஒரு சில பக்தர்கள் கட்டணம் செலுத்தாமல் கோவில் நிர்வாகத்திடம் பசு மாட்டை ஒப்படைக்காமல் கோவிலில் விட்டு செல்கின்றனர். இதனால் கோவில் வளாகத்தில் ஆங்காங்கே பசுமாடுகள் சுற்றி திரிந்து வருகிறது. 

இந்நிலையில் கோவில் வளாகத்தில் சுற்றித்திரிந்த ஒரு பசு மாட்டில் திடீரென பால் சுரந்து வெளியேறியது. இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள் வியப்புடன் பார்த்து பசுவை தொட்டு வணங்கி பாலை வாட்டர் கேன் மற்றும் பாத்திரத்தில் பிடித்து சென்றனர். சிலர் அந்த பாலை குடித்து வணங்கி சென்றனர். 

click me!