தனுஷ் யார் மகன்? உரிமை கொண்டாடிய மதுரை தம்பதி! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

First Published Mar 13, 2024, 11:16 PM IST

மதுரையை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி, நடிகர் தனுஷ் எங்கள் மகன் என உரிமை கொண்டாடிய நிலையில், இது குறித்த மேல் முறையீடு வழக்கை தற்போது மேலூர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
 

dhanush new movie

மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த, கதிரேசன் - மீனாட்சி தம்பதி சிறு வயதில் காணாமல் போன தங்களின் மகன் கலைச்செல்வன்தான் தான் நடிகர் தனுஷ் என்றும், அவரை கஸ்தூரி ராஜா வளர்த்து இப்போது நடிகராக்கிவிட்டார் என கடந்த 2016-ஆம் ஆண்டு மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் தனுஷ் தங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Actor Dhanush

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனுஷை நேரில் ஆஜராகாக்கோரி உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தனுஷ் தரப்பில் இருந்து, மீனாட்சி - கதிரேசன் யார்  தெரியாது என்றும், இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Vettaiyan Update: 'வேட்டையன்' படத்தில் இணைந்த ரித்திகா சிங்..! தலைவருடன் எடுத்த மாஸ் போட்டோ வைரல்..!
 

இடியாப்ப சிக்கலாகி கடந்த 8 வருடங்களுக்கு மேலாக இந்த வழக்கு விடாப்பிடியாக நடந்து வந்த நிலையில், மீனாட்சி - கதிரேசன் தம்பதி தனுஷின் கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை போலியாக தாக்கல் செய்துள்ளதால் குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென... மீண்டும் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த மனு தள்ளுபடி செய்யபட்டது. இதை எதிர்த்து கதிரேசன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சீராய்வு மனு செய்திருந்தார்.

தற்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன், 'ஏதோ உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்பதால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவிட்டுள்ளார்.

4 வயசுல அந்த ரகசியம் தெரிஞ்சதும் கமல் துடிச்சு போயிட்டான்! மறக்க முடியாத நாள்.. பற்றி பேசிய சாருஹாசன்!

click me!