குக் வித் கோமாளியில் இனி வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக இவர்தான்... செம்ம செலக்‌ஷன் என பாராட்டும் ரசிகர்கள்

First Published Mar 15, 2024, 8:42 AM IST

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக புது நடுவரை தேர்வு செய்துள்ளனர்.

cook with comali

விஜய் டிவியில் பிக்பாஸுக்கு நிகராக டிஆர்பியில் சக்கைப்போடு போடும் ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்கு சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதன் முதல் சீசனில் வனிதா டைட்டில் வின்னர் ஆனார். அடுத்ததாக இரண்டாவது சீசனில், கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும், நான்காவது சீசனில் மைம் கோபியும் டைட்டிலை தட்டிச் சென்றனர்.

cook with comali Judges

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்போது ஆரம்பமாகும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான அப்டேட்டுகள் தான் கிடைத்தது. இந்நிகழ்ச்சியின் தூணாக இருந்து வந்ததே அதன் நடுவர்கள் தான். செஃப் தாமுவும், வெங்கடேஷ் பட்டும் போட்டியாளர்களோடு இணைந்து காமெடி செய்வதில் தொடங்கி, உணவை சுவைத்து அதன் நிறை குறைகளை சொல்வது வரை மக்களின் மனம் கவர்ந்த நடுவர்களாக மாறிவிட்டனர் என்றே சொல்லலாம்.

இதையும் படியுங்கள்... 45 வயதிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி! லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Venkatesh Bhat and chef Damu

இந்த நிலையில், கடந்த மாதம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட வெங்கடேஷ் பட், தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் அறிவித்ததை தொடர்ந்து அந்நிகழ்ச்சியை தயாரித்த மீடியா மேன்சன்ஸ் நிறுவனமும் விலகுவதாக அறிவித்தது. பின்னர் அந்நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திவ் மணியும் தான் விலகுவதை உறுதி செய்தார். இப்படி அடுத்தடுத்து பிரபலங்கள் விலகியதால், குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடக்குமா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியது.

madhampatty rangaraj

இந்நிலையில், அந்நிகழ்ச்சி குறித்த குட் நியூஸ் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் விரைவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளதாம். மேலும் அதிலிருந்து விலகிய செஃப் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக சோசியல் மீடியாவில் டிரெண்டிங் ஸ்டாராக வலம் வரும் செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறக்கப்பட உள்ளாராம். இவர் நடிகரும் கூட, தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்கஸ், பெண்குயின் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவரும் செஃப் தாமுவும் சேர்ந்து தான் 5-வது சீசனில் நடுவராக பணியாற்றப் போகிறார்களாம். இதை அறிந்த ரசிகர்கள் செம்ம செலக்‌ஷன் என பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Bayilvan Ranganathan: நடிகர் - நடிகைகள் ஈஷா யோகா மையத்தை தேடி வர காரணம் இதுவா? உண்மையை உடைத்த பயில்வான்!

click me!