EVKS : காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.!- ஈவிகேஎஸ்

By Ajmal Khan  |  First Published May 17, 2024, 8:13 AM IST

தமிழகத்தில் சீமான், அண்ணாமலை போன்றவர்கள் ஆட்சி பொறுப்பில் வந்தால் நமது குழந்தைகள் நிலைமை என்னவாகும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம் செய்தார். 
 


மோடியின் முகம் நாளுக்கு நாள் மாறுகிறது

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன், பொய் பேசுவதை தொழிலாக கொண்டுள்ள மோடியை வீட்டுக்கு அனுப்பவில்லை என்றால் நாடு எவ்வளவு மோசமான நிலைக்கு செல்லும் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். மோடியின் முகம் நாளுக்கு நாள் மாறி வருகிறது. உள்ளத்தை தவிர அவர் முகம் தலை எல்லாம் வெள்ளையாக உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

வெறிபிடித்த நாயை விரட்ட வேண்டிய தானே காங்கிரஸ் கட்சியின் வேலை, நாட்டுக்கு மிகப்பெரிய கேடு நாட்டுக்கு பாடுபட்டு வாங்கிய சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்.பொய் பேசுவதை தொழிலாக கொண்டுள்ள மோடியை வீட்டுக்கு அனுப்பவில்லை என்றால் நாடு எவ்வளவு மோசமான நிலைக்கு செல்லும் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். 

ஸ்டாலின் ஆட்சி-காமராஜர் ஆட்சி

மோடியின் ஆட்சியில் வெள்ள நிவாரணம், புயல் நிவாரணம் வழங்கவில்லை ஆயிரக்கணக்கான கோடி கேட்ட நிலையில் 250கோடி ரூபாய் மட்டுமே கொடுத்து இருக்கிறார்கள். 400இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி வந்த பாஜக தற்போது எண்ணிக்கை சொல்வதில்லை. நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் ராகுல்காந்தி பிரதமர் வர வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கிறார்கள்.  ராகுல்காந்தி உறுதியாக பிரதமராக வருவார். யார் நல்லாட்சி தந்தாலும் காமராஜர் ஆட்சி தான்.  அந்த வகையில் ஸ்டாலின் நல்லபடியாக ஆட்சி செய்து வருகிறார்.  ஆட்சிக்கு திராவிட ஆட்சி காமராஜர் ஆட்சி,கக்கன் ஆட்சி என்றெல்லாம் பெயர் வைக்கலாம் சிறு தவறுகள் இருக்கலாம் அதை திருத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியல் இல்லை

காங்கிரஸ் கட்சி டெல்லியில் மீண்டும் தலைமையில் ஆட்சி வரவேண்டும் என கூறியவர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என தெரிவித்தார். மேலும் தாம்  அடைய வேண்டிய பதவியை எல்லாம் நான் அடைந்து உள்ளதாகவும் கூறினார். தமிழகத்தில் சீமான், அண்ணாமலை போன்றவர்கள் ஆட்சி பொறுப்பில் வந்தால் நமது குழந்தைகள் நிலைமை என்னவாகும் எனவும் ஈவிகேஸ் விமர்சனர் செய்தார்.

Radhika Sarathkumar: ராதிகா சரத்குமார் எடுத்த அதிரடி முடிவு! கைதாகிறாரா திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி?
 

click me!