ஒத்த சட்டையில் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் கொட்டி... நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் லாஸ்லியாவின் ஹாட் கிளிக்ஸ்

First Published Oct 31, 2023, 3:09 PM IST

நடிகை நயன்தாராவை போல் ஒரே ஒரு சட்டை மட்டும் அணிந்து கிளாமர் தூக்கலாக நடிகை லாஸ்லியா நடத்தியுள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

losliya, Nayanthara

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் லாஸ்லியா. இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அந்நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக எண்ட்ரி கொடுத்தார் லாஸ்லியா. அந்த சீசன் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதற்கு லாஸ்லியாவும் ஒரு முக்கிய காரணம் என கூறலாம். 

losliya

ஏனெனில் அந்த சீசனில் இவருக்கும் கவினுக்கும் இடையேயான காதல் பெரியளவில் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி சாண்டி, தர்ஷன், கவின் மற்றும் முகென் ராவ் ஆகியோருடன் சேர்ந்து லாஸ்லியா அடிக்கும் அரட்டைகள் எல்லாம் அந்த சீசனை தொய்வின்றி கொண்டு சென்றன. அதுமட்டுமின்றி லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அவரது தந்தை வெளிநாட்டில் இருந்து வந்து, லாஸ்லியா - கவினை காதலிப்பதை கண்டித்ததை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

losliya mariyanesan

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது உருகி உருகி காதலித்த கவினும் லாஸ்லியாவும், அந்நிகழ்ச்சி முடிந்ததும் கருத்து வேறுபாடு காரணமாக பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர். கவின் உடனான காதல் முறிவுக்கு பின் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய லாஸ்லியாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன. அதன்படி பிரெண்ட்ஷிப், கூகிள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்தார் லாஸ்லியா. ஆனால் அந்த படங்கள் எல்லாம் படுதோல்வி அடைந்தன.

losliya latest photoshoot

தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால், தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு தாவி இருக்கும் லாஸ்லியா, விதவிதமாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதன்மூலம் வாய்ப்பு தேடி வருகிறார். அந்த வகையில் தற்போது ஆரம்பம் படத்தில் நயன்தாரா ஒத்த சட்டை மட்டும் அணிந்து செக்ஸியாக போஸ் கொடுத்ததுபோல் லாஸ்லியாவும் ஒத்த சட்டையில் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் கொட்டி போட்டோஷூட் நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் நிக்சன் உடனான காதல் சர்ச்சை எதிரொலி... கடும் கோபத்தில் ஐஷூவின் பெற்றோர்! இன்ஸ்டாவால் வெளிவந்த உண்மை

click me!