Latest Videos

30 நாட்களில் உங்கள் முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் கொட்டாமலும் வளர 'இத' பண்ணுங்க!

First Published May 23, 2024, 1:00 PM IST

உங்களுக்கு நீளமான முடி வேண்டுமென்றால், வெந்தயம் மற்றும் வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்கள். 

பொதுவாகவே, பெண்கள் தங்களுக்கு நீளமான முடி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதால், பலவித பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். நீங்களும் நீளமான கூந்தலைப் பெற விரும்பினால் உங்களுக்கான பதிவு தான் இது.

ஆம், இயற்கையான முறையில் உங்கள் தலை முடி ஆரோக்கியமாகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்றால்  வெந்தயம் மற்றும் வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்கள். இவை இரண்டும் முடி வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் மற்றும் விரைவில் நல்ல பலனையும் தரும். எனவே, இந்த பதிவில் வெந்தயம் பற்றி வெங்காயத்தை கூந்தலுக்கு எந்தெந்த வழிகளில் பயன்படுத்தலாம் என்பதை குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

முடி வளர்ச்சிக்கு வெந்தயத்தின் நன்மைகள்: வெந்தயம் முடி வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், இதில் உள்ள புரோட்டின் முடியை பலப்படுத்துவதோடு மட்டுமின்றி, வளர்ச்சியையும் கொடுக்கும். அதுபோல இதில் இருக்கும், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் முடி உதிர்தலை தடுக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

முடி வளர்ச்சிக்கு வெங்காயத்தின் நன்மைகள்:  வெங்காயத்தை தலை முடிக்கு பயன்படுத்தினால் விரைவிலேயே முடி வளர தொடங்கும். மேலும் இதில் இருக்கும் சல்ஃபர் முடி வளர்ச்சியைஅதிகரிக்க செய்கிறது. முக்கியமாக, வெங்காயத்தில் இருக்கும் வைட்டமின் சி, பி6, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் முடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது. 

இதையும் படிங்க:  15 நாள் தொடர்ந்து "இந்த" ஆயில் யூஸ் பண்ணுங்க...முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் மாறும்..!

வெந்தயம் - வெங்காயம் ஹேர் மாஸ்க்: முடி வளர்ச்சிக்கு, வெந்தயம் மற்றும் வெங்காயத்தின் உதவியுடன் ஹேர் மாஸ்க் செய்ய, முதலில் வெந்தயத்தை சிறிது நேரம் ஊறவைத்து அதை  அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இதில் வெங்காய சாறை சேர்த்து நன்கு கலந்து உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியில் தடவி மெதுவாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கவும்.

இதையும் படிங்க:  Long hair care: நீண்ட கூந்தலைப் பராமரிக்க அசத்தலான டிப்ஸ் இதோ உங்களுக்காக!

வெந்தயம் - வெங்காயம் தண்ணீர்: வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதை வடிகட்டி ஆற வைத்து, அதனுடன் வெங்காய சாறை கலக்கவும். நீங்கள் ஷாம்பு போட்டு தலைக்கு குளித்த பிறகு இந்த நீரை கொண்டு உங்கள் முடியில் பயன்படுத்துங்கள். சிறிது நேரம் கழித்து மிதமான வெந்நீரல் தலையை அலசுங்கள்.

வெந்தயம் - வெங்காயம் எண்ணெய்: வெந்தயம் மற்றும் வெங்காயத்தில் இருந்து எண்ணெய் தயாரிக்க முதலில், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் வெந்தயத்தை போட்டு அது பழுப்பு நிறமாக மாறும் வரை சூடாக்கி அதை வடிகட்டி ஆற வையுங்கள். இப்போது அதில் வெங்காய சாறை சேர்த்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வையுங்கள். நீங்கள் இதை பயன்படுத்தும் போது உச்சம் தலையில் நன்கு மசாஜ் செய்து சுமார் 2 மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு தலைக்கு குளியுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!