பிரைவேட் ஜெட்.. ஆடம்பர பங்களா.. ராஜ வாழ்க்கை வாழும் விஜய் தேவரகொண்டாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு..

First Published Jun 18, 2024, 10:11 AM IST

விஜய் தேவரகொண்டாவின் ஆடம்பர வாழ்க்கை குறித்தும் அவரின் சொத்து மதிப்பு குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்

Vijay Devarakonda

2011-ம் ஆண்டு ரவிபாபு இயக்கத்தில் வெளியான நுவ்விலா என்ற காதல் நகைச்சுவை படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டா திரையுலகில் அறிமுகமானர். பின்னர் லைஃப் இஸ் பியூட்டிபுல் (2012) மற்றும் எவடே சுப்ரமணியம் (2015) போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.

Vijay Devarakonda

இருப்பினும், 2016 இல் வெளியான பெல்லி சூப்புலு (2016) மூலம் அவருக்கு பிரேக்த்ரூ படமாக அமைந்தது. டைத்தது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது.

Vijay Devarakonda

விஜய் தேவரகொண்டாவின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்தது. பெல்லி சூப்புலு  சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்றது. இந்த படம் விஜய் தேவரகொண்டாவின் கெரியரில் முக்கியமான படம்.

Vijay Devarakonda

ஆனால் அர்ஜுன் ரெட்டி என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் மூலம் அவர் நாடு முழுவதும் பிரபலமானார். இந்த படத்தில் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் பல விருதுகளை வென்றார். இந்த படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது.

Vijay devarakonda

நடிகர் மட்டுமின்றி வெற்றிகரமான தொழிலதிபராகவும் விஜய் தேவரகொண்டா இருக்கிறார். அவர் Rowdy Wear என்ற பேஷன் பிராண்டை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ் என்ற வாலிபால் அணியின் இணை உரிமையாளராகவும் இருக்கிறார்..

Vijay Devarakonda

அதுமட்டுமின்றி, கிங் ஆஃப் தி ஹில் என்டர்டெயின்மென்ட் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் விஜய் தேவரகொண்டா வைத்திருக்கிறார். இந்த நிறுவனம்  மீக்கு மாத்திரமே செப்தா (2019) மற்றும் புஷ்பக விமானம் (2021) போன்ற திரைப்படங்களை தயாரித்தது..

Vijay Devarakonda

இதனிடையே டியர் காம்ரேட் மற்றும் கீதா கோவிந்தம் ஆகிய படங்களில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்படுகிறது. இவர்களது உறவு குறித்த ஊகங்கள் கடந்த சில நாட்களாகவே பரவி வந்தாலும், இருவரும் அதை உறுதிப்படுத்தவில்லை.எனினும் இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியே செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

vijay devarakonda

விஜய் தேவரகொண்டாவின் ஆடம்பர வாழ்க்கை குறித்தும் அவரின் சொத்து மதிப்பு குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம். அவர் ஹைதராபாத்தின் ஜூப்லி ஹில்ஸில் நடிகர் தானே ரூ.15 கோடி பங்களாவை வாங்கியுள்ளார். ஒரு பெரிய கண்ணாடி நுழைவாயில் மற்றும் மர கதவுகள் கொண்ட இந்த நவீன மாளிகையாக இந்த வீடு திகழ்கிறது. அவரின் வீட்டில் பானை செடிகள் நிறைந்த பசுமையான தோட்டமும் உள்ளது. 

Actor Vijay Devarakonda

ரூ.65 முதல் ரூ.68 லட்சம் வரை மதிப்புள்ள BMW 5 series கார்களை அவர் வைத்திருக்கிறார். 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Ford Mustang காரையும் அவர் வைத்திருக்கிறார்.

Vijay Devarakonda

இவை தவிர ரூ. 64 லட்சம் மதிப்புள்ள Range Rover மற்றும் ரூ. 85 லட்சம் மதிப்புள்ள Volvo XC 90 சொகுசு கார்களையும் விஜய் தேவரகொண்டா வைத்திருக்கிறார். இவை தவிர, ஒரு பிரைவேட் ஜெட்டையும் அவர் வைத்திருக்கிறார்.

Vijay Devarakonda Networth

திரைத்துறையில் மிகவும் லாபகரமான நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு ரூ.65 கோடி என்று கூறப்படுகிறது.

Latest Videos

click me!