Maharaja : தொடரும் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் மகாராஜா... 4 நாட்களில் இத்தனை கோடி கலெக்‌ஷனா?

First Published Jun 18, 2024, 10:11 AM IST

நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யப் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் மகாராஜா படத்தின் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

vijay sethupathi

சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி பின்னர் சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தவர் விஜய் சேதுபதி. இப்படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் வெற்றிக்கு பின்னர் பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சேதுபதி, சூப்பர் டீலக்ஸ், 96 என வரிசையாக பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.

Maharaja Movie

ஒரு கட்டத்தில் ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கு அவரது ஹீரோவுக்கான மார்க்கெட் குறையத் தொடங்கியது. இதனால் உஷாரான விஜய் சேதுபதி ஜவான் படத்துக்கு பின்னர் இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக அறிவித்தார். அதன் பின்னர் ஹீரோவாக நடிப்பதில் பிசியானார் விஜய் சேதுபதி. அவர் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆகி உள்ள திரைப்படம் தான் மகாராஜா.

இதையும் படியுங்கள்... Abbas : கமல்ஹாசனோட பேவரைட் பைக் இதுதானாம்... நியூசிலாந்தில் தேடிக் கண்டுபிடித்த நடிகர் அப்பாஸ்

Maharaja Movie Box Office

நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமான இதை குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் நட்டி நட்ராஜ், அபிராமி, திவ்ய பாரதி, அனுராக் கஷ்யப், மம்தா மோகன் தாஸ், சிங்கம் புலி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு கடந்த ஜூன் 14-ந் தேதி திரைக்கு வந்த இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்து வருவதால், இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

Maharaja Movie Day 4 Box Office Collection

முதல் மூன்று நாட்களில் உலகளவில் ரூ.32.6 கோடி வசூலித்திருந்ததாக படக்குழுவே நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில், நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி விடுமுறை என்பதால் நேற்றும் வசூல் வேட்டை நடத்தி உள்ள மகாராஜா திரைப்படம் நான்கு நாட்கள் முடிவில் ரூ.40 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது. விரைவில் இப்படம் ரூ.50 கோடி வசூலை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பெரிய ஹீரோ வச்சு படம் பண்ணியே எஸ்கேப் ஆகுறாரு.. முடிஞ்சா இவர வச்சு ஹிட் கொடுங்க! அட்லீக்கு சவால் விட்ட பிரபலம்

Latest Videos

click me!