கேட்டதை கொடுத்த தேர்தல் ஆணையம்.. குஷியில் டிடிவி.தினகரன்.. இந்த முறையாவது விசிலடிக்குமா குக்கர்?

First Published Mar 21, 2024, 7:45 AM IST

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள டிடிவி.தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 

TTV Dhinakaran

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி.தினகரனின் அமமுக கட்சி இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், அமமுக கட்சிக்கு பாஜக 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், எந்தெந்த தொகுதி என்பது குறித்து விவரம் வெளியாகவில்லை. 

AMMK - BJP Alliance

இந்த தேர்தலில் டிடிவி. தினகரன் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 24ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் டிடிவி. தினகரன், தேனி தொகுதியில் இருந்து தனது முதற்கட்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் என அமமுக அறிக்கை வெளியிட்டிருந்தது.

Election Commission

இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் தங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்தில் டிடிவி.தினகரன் விண்ணப்பித்திருந்தார். இதனை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. 

Cooker Symbol

கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே. நகர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக டிடிவி.தினகரன் போட்டியிட்டார். அப்போது அவருக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டது. சுமார் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். அதன் பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.  பின்னர் 2019ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில்  டிடிவி.தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி கோரிக்கை வைத்த நிலையில் அவருக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

click me!