Nagore : நாகூர்.. திருடுபோன தங்க நகைகள்.. கைவரிசை காட்டி ஆட்டோவில் தப்பிய குற்றவாளி - போலீசார் அதிரடி!

Nagore : நாகூர்.. திருடுபோன தங்க நகைகள்.. கைவரிசை காட்டி ஆட்டோவில் தப்பிய குற்றவாளி - போலீசார் அதிரடி!

Ansgar R |  
Published : May 21, 2024, 11:50 PM IST

Nagore : நாகை அடுத்த நாகூரில் திருடுபோன 32 பவுன் தங்க நகைகளை போலீசார் 2 வாரத்தில் மீட்டுள்ள சம்பவம் பாராட்டுகளை பெற்று வருகின்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நூல்கடைத் தெருவைச் சேர்ந்த தாவூது பாத்திமா நாச்சியார் என்பவர் வீட்டில் கடந்த 8ம் தேதி  தங்க நகைகள் காணாமல் போனது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சில சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இறுதியாக இதில் தொடர்புடைய நபர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஜெகபர்சாதிக் என்பது தெரியவந்தது. திருடிய தங்க நகைகளை ஆட்டோ மூலம் விற்பனை செய்ய எடுத்துச் சென்றபோது தனிப்படை போலீசாரிடம் கையும் களவுமாக அவர் சிக்கினார். 

மேலும் அவரிடமிருந்த 32 பவுன் தங்க நகைகள் மற்றும் தப்பி செல்ல முயன்ற ஆட்டோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு நாகூர் காவல் நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டது. சிசிடிவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை 2 வாரத்தில் கைது செய்த தனிப்படை போலீசாரை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

03:43தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது...! அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
05:51மக்களுக்கு தெரியாமல் அரசு மதுபான கடை அரசுக்கு எச்சரிக்கை பொதுமக்கள் போராட்டம்
05:292026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வெற்றிபெறும் - வானதி சீனிவாசன் பேட்டி
04:29உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இதுவரை பத்தாயிரம் முகாம்களில் நடத்தப்பட்டிருக்கிறது - மா சுப்பிரமணியன் !
04:19ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது ! வைகோ பேட்டி.
03:10பராசக்தி திரைப்படம் தொடர்பான கேள்விக்கு விமர்சனமாக பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்
02:1741 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக நடிகர் விஜய் டெல்லி புறப்பட்டார்..
04:54பாஜக அரசு எவ்வளவு பூச்சாண்டி காட்டினாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் நடக்காது ! கி. வீரமணி அதிரடி பேச்சு
06:353000 பொங்கல் பரிசு திமுக கட்சி நிதி அல்ல? ....மக்களின் வரி பணம் ! ஆர்.பி .உதயகுமார் குற்றச்சாட்டு
03:55ஜனநாயகன் திரைப்படம் நெருக்கடிக்கு அரசியல் காரணம் இல்லை ! நடிகர் சரத்குமார் பேட்டி
Read more