டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றின் நிறுவனர் எலான் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசிடம் பேசியுள்ளார்.
எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக சீனா மற்றும் இந்தோனேசியாவிற்கு பயணம் செய்தார். தொழில்நுட்ப கோடீஸ்வரரான எலான் மஸ்க் சமீபத்தில் பாலியில் நடந்த 10வது உலக நீர் மன்றத்தில் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து Starlink சேவைகளுக்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறார்.
இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதுகுறித்து X இல் பதிவிட்டுள்ளார். அதில், “ஜனாதிபதி உலக நீர் மன்றத்திற்காக என்னுடன் பாலிக்கு 2 நாள் விஜயத்தின் போது எலான் மஸ்க்கை இன்று சந்தித்தார். இலங்கையின் மீட்சி, பொருளாதார ஆற்றல் மற்றும் முதலீட்டுக்கான புதிய வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதியும் எலான் மஸ்க்கும் கலந்துரையாடினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஏப்ரல் 20-ஏப்ரல் 22 ஆம் தேதிகளில் மஸ்க் இந்தியாவிற்கு வருகை தருவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து எலான் மஸ்க் தரப்பில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பயணத்தின் போது எலான் மஸ்க் பெரிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதில் சுமார் $2-3 பில்லியன் EV உற்பத்தி வசதி மற்றும் நாட்டில் ஸ்டார்லிங்க் தொடர்பான சில மேம்பாடுகள் ஆகியவை அடங்கும். புது தில்லியில் உள்ள பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிர்வாகிகளை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளை நாட்டில் தொடங்குவதற்கு இந்திய அரசாங்கத்திடம் இருந்து சில அனுமதிகளுக்காக அவர் காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபிஸ் போக ஸ்கூட்டரை தேடுறீங்களா.. இதோ 120 கிமீ மைலேஜ் தரும் ஏதரின் சிறந்த ஸ்கூட்டர்..