புல்வாமா தாக்குதலில் தொடர்பு... முதியவரை மிரட்டி ரூ.32 லட்சம் அபேஸ் செய்த வாட்ஸ்அப் மோசடி கும்பல்!

By SG Balan  |  First Published May 21, 2024, 11:41 PM IST

கைது செய்யப்படாமல் இருக்க வேண்டுமானால் தண்டத் தொகை செலுத்த வேண்டும் என்று மிரட்டி வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ.32,13,305 டெபாசிட் செய்ய வற்புறுத்தியுள்ளனர்.


மகாராஷ்டிர மாநிலத்தின் நவி மும்பையில் முதியவர் ஒருவர் மீது, பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி மிரட்டி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர்களை மும்பை போலீசார் தேடிவருகின்றனர்.

பாதிக்கப்பட்ட 82 வயதான முதியவர் பல ஆண்டுகள் துபாயில் வசித்துவிட்டு நாடு திரும்பியுள்ளார். மும்பையில் தனது மகனுடன் வசித்துவந்த அந்த முதியவருக்கு அடையாளம் தெரியாத நபர்கள் 3 பேர் பல முறை தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

மே 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை முதியவரைத் தொடர்புகொண்டு பேசிய அவர்கள், தேச விரோத நடவடிக்கைகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் புல்வாமா தாக்குதல் வழக்குகளில் முதியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

40 பிளமிங்கோ பறவைகளைக் கொன்ற மும்பை விமானம்! தரையிறங்கும் போது நடந்த துயரம்!

இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைக்காக அவரை எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்றும் மிரட்டியுள்ளனர். வழக்கு தொடர்பான ஆவணங்கள் என்று போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் பெயரில் போலி ஆவணங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளனர்.

இந்த வழக்குகளில் கைது செய்யப்படாமல் இருக்க வேண்டுமானால் தண்டத் தொகை செலுத்த வேண்டும் என்று மிரட்டி வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ.32,13,305 டெபாசிட் செய்ய வற்புறுத்தியுள்ளனர்.

ரூ.32 லட்சத்துக்கு மேல் இழந்த பிறகு சந்தேகம் அடைந்ந முதியவர் ஞாயிற்றுக்கிழமை நவி மும்பையின் சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரின், முதியவருக்கு போன் செய்து மிரட்டிய மூன்று பேர் மீது மோசடி, சதி திட்டம் தீட்டியது, மிரட்டல் ஆகிய குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று நவி மும்பையின் சைபர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஆர்.டி.ஓ. ஆபீஸுக்கு அலையவே வேண்டாம்... டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய விதி அறிமுகம்

 

மனித விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக்! ஆண்மைக்குறைவு அதிகரிக்கும் அபாயம்!

 

click me!