40 பிளமிங்கோ பறவைகளைக் கொன்ற மும்பை விமானம்! தரையிறங்கும் போது நடந்த துயரம்!

விமான விபத்தில் பிளமிங்கோ பறவைகள் சிக்குவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த சில வாரங்களாக ஃபிளமிங்கோ பறவைகளின் இறப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்த விபத்து சூழலியலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

Aircraft about to land at Mumbai airport flies into flock of flamingos, at least 40 birds dead sgb

மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த எமிரேட்ஸ் விமானம் ஃபிளமிங்கோ பறவைக் கூட்டத்தின் ஊடாக பறந்து சென்றதால், குறைந்தது 40 பிளமிங்கோ பறவைகள் உயிரிழந்துள்ளன. விமான விபத்தில் பிளமிங்கோ பறவைகள் சிக்குவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

ஆனால், கடந்த சில வாரங்களாக ஃபிளமிங்கோ பறவைகளின் இறப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்த விபத்து சூழலியலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எமிரேட்ஸ் விமானம் EK 508 திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் பிரதான ஓடுபாதையில் தரையிறங்க முயன்றபோது, கடைசி நிமிடத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

"விமானம் தரையிறங்கிய பின் ஆய்வு செய்யும்போது, விமானத்தின் உடற்பகுதியில் பல பறவை மோதியதாக விமானிகள் எங்களுக்குத் தெரிவித்தனர். தரையிறங்கிய பிறகும் பறவைகள் விமானத்தின் மீது மோதி தாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்" என்று மும்பை விமானப் போக்குவரத்து வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கிறார்.

ஆதார் கார்டு மோசடியில் சிக்கினா அக்கவுண்ட்டே காலி... பாதுகாப்புக்கு நிபுணர்கள் தரும் டிப்ஸ்!

Aircraft about to land at Mumbai airport flies into flock of flamingos, at least 40 birds dead sgb

விமான விபத்தில் 40 பறவைகள் பலி:

பறவைகளின் சடலங்கள் அந்த பகுதியில் சிதறிக் கிடந்தன என சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பணிகளைச் செய்துவரும் NatConnect அறக்கட்டளையின் இயக்குனர் பி.என்.குமார் கூறியுள்ளார்.

வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பெரும்பாலான பறவை சடலங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. விபத்தில் குறைந்தது 40 பறவைகள் பலியாகியுள்ளன. அந்தப் பறவைகள் தானே க்ரீக் ஃபிளமிங்கோ சரணாலயத்தை (TCFS) பறந்துகொண்டிருந்தபோது விபத்து நேர்ந்துள்ளது.

பெரும்பாலான சடலங்கள் அகற்றப்பட்டாலும், சில பகுதிகளில் பறவைகளின் சிதைந்த உடல் பாகங்களைக் காணமுடிவதாக விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் வசிப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.

கூகுள் மேப் பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம்! தப்பித்தவறி இதை மட்டும் செய்யாதீங்க டியூட்!

"இதுபோன்ற சம்பவம் மும்பையில் ஒருபோதும் நடக்காததால் இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அடல் சேது பாலம் போன்ற பெரிய கட்டுமானத் திட்டங்களால் ஃபிளமிங்கோக்கள் தங்கள் பாதைகளை மாற்றுகின்றன. ஒளி மாசுபாட்டின் காரணமாகவும் பறவைகள் திசைதிருப்பப்படுகின்றன" என்றும் குமார் கூறுகிறார்.

இந்த விபத்து குறித்து எமிரேட்ஸ் விமான நிறுவனம் தரப்பில் அறிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை.

Aircraft about to land at Mumbai airport flies into flock of flamingos, at least 40 birds dead sgb

ஃபிளமிங்கோ மரணங்கள்:

மும்பையில் கடந்த சில வாரங்களாக ஏராளமான ஃபிளமிங்கோ மரணங்கள் பதிவாகியுள்ளன. ஏப்ரல் கடைசி வாரத்தில், நவி மும்பையில் உள்ள சீவுட்ஸ் அருகே 12 காயமடைந்த ஃபிளமிங்கோக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் ஐந்துக்கும் மேற்பட்ட பறவைகள் சிகிச்சை பலனின்றி இறந்தன.

முன்னதாக பாம் பீச் சாலையில் வேகமாக வந்த வாகனம் ஒன்று ஃபிளமிங்கோ பறவை மீது மோதியது. பிப்ரவரியில், மூன்று ஃபிளமிங்கோக்கள் விளம்பர பலகையில் மோதி கீழே விழுந்தன.

iPhone 16 Leaks: ஐபோன் 16 ரகசியம் லீக்! ஆப்பிள் போட்ட பிளானை போட்டு உடைத்த நெட்டிசன்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios