"ஓஹோ எந்தன் பேபி".. ராகவாவை தொடர்ந்து தம்பியை கோலிவுட்டில் களமிறக்கும் அடுத்த நடிகர் - டைட்டில் லுக் இதோ!

First Published Feb 11, 2024, 8:15 PM IST

Oho Enthan Baby Movie : பிரபல நடிகர் ஒருவர் தனது தம்பியை தமிழ் திரையுலகில் களம் இறக்குகிறார். "ஓஹோ எந்தன் பேபி" என்கின்ற அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

Elvin

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் திகழ்ந்தவரும் ராகவா லாரன்ஸ் அவர்கள் தனது தம்பி எல்வின் அவர்களை "புல்லட்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அண்மையில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

களத்தூர் கண்ணம்மாவில் 500 ரூபாய்.. அதன் பின் விஸ்வரூபம் எடுத்த "ஆண்டவர்" - இந்தியன் 2வில் பெற்ற சம்பளம் என்ன?

Vishnu Vishal

இந்நிலையில் லால் சலாம் திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றுள்ள தமிழ் திரையுலக நடிகர் விஷ்ணு விஷால் தனது தம்பி ருத்ராவை தமிழ் திரை உலகில் நடிகராக தற்போது அறிமுகம் செய்திருக்கிறார். அந்த திரைப்படத்திற்கு "ஓஹோ எந்தன் பேபி" என்று பெயரிடப்பட்டுள்ளது.

Oho enthan baby movie

அறிமுக இயக்குனர் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தோடு இணைந்து VV ஸ்டுடியோஸ் நிறுவனமும் தயாரித்து வழங்க உள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.

அவருக்கு வேற ஒரு முகம் இருக்கு.. கோலிவுட்டின் டெரர் வில்லன் ஆனந்தராஜ் - அவரை பற்றிய சீக்ரெட் சொன்ன பயில்வான்!

click me!