Kitchen Hacks : உங்கள் மிக்ஸி நீண்ட நாள் நீடிக்க விரும்பினால் 'இந்த' ஸ்பெஷல் டிப்ஸ் உங்களுக்காக..!

First Published Mar 19, 2024, 2:00 PM IST

உங்கள் மிக்ஸி நீண்ட காலம் நீடிக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். வாருங்கள் இப்போது அது பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம்..
 

'மிக்ஸி' இதைப் பற்றி சிறப்பு அறிமுகம் தேவையில்லை. ஏனெனில், இதைப் பற்றி அனைவருக்கும் தெரியும். எல்லாருடையை வீடுகளில் 
பயன்படுத்தும் பொருட்களில் இதுவும் ஒன்றாகும். இது அன்றாடத் தேவைகளின் ஒரு பகுதியாகவும் மாறிவிட்டது என்றே சொல்லலாம்.

இன்னும் சொல்லப்போனால், இப்போது மிக்சர் இல்லாத வீடு இல்லை. காலையில் எழுந்தது முதல், இரவு படுக்கப் போகும் வரை மிக்ஸியில் எப்பொழுதும் ஏதாவது செய்கிறோம். காலையில் சட்னி, மசாலா அரைப்பது என எல்லாவற்றுக்கும் மிக்சிதான் பயன்படுகிறது. இப்போது இதில் பல வகையான அம்சங்கள் உள்ளன. விலையைப் பொறுத்து.. அவற்றின் அம்சங்கள் மாறுபடும். 

ஆனால், சிலருக்கு மிக்ஸியை வாங்கிய ஓரிரு வருடங்களிலேயே அது பழுது ஏற்பட்டுவிடும். எனவே, மிக்ஸியை பயன்படுத்தும் போது சில குறிப்புகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். இவற்றைப் பின்பற்றினால், மிக்ஸி நீண்ட காலம் நீடிக்கும். வாருங்கள் இப்போது அது பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம்..

மெதுவாக வேகத்தை அதிகரிக்கவும்: பலர் மிக்ஸியை எடுத்தவுடனே அதி வேகத்தில் செல்வார்கள். ஆனால் அது தவறு. அப்படி ஒருபோதும் செய்யவே வேண்டாம். முதலில் அதை முதல் முறையில் வைத்து பின்னர் மெதுவாக வேகத்தை அதிகரிக்கவும். இவ்வாறு செய்வதால் கத்திகள் சேதமடைவது தடுக்கப்படும். மேலும் மிக்ஸி ஜாரை வைக்கும் போது.. சரியாக போட்ட பிறகே.. மிக்ஸியை ஆன் செய்ய வேண்டும். இல்லையெனில் மிக்ஸி கெட்டுவிடும்.

இதையும் படிங்க: ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல், உங்கள் பழைய மிக்ஸியை புதிது போல் மாற்றி மீண்டும் பயன்படுத்த..சூப்பர் டிப்ஸ் .!

ஜார் ஈரமாக இருக்கக்கூடாது: நீங்கள் மிக்ஸி யூஸ் பண்ணுவதற்கு முன் ஜார் ஈரமாக இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். இல்லையெனில், ஈரப்பதம் மோட்டாருக்குள் சென்று, மோட்டார் விரைவில் பழுதடையும். அதிர்ச்சி ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கவனமாக இருங்கள்.

இதையும் படிங்க: எந்த உணவிற்கும் பெஸ்ட் ஹீரோவான சிறந்த சட்னியை செய்ய உங்கள் நண்பன் மோர்பி ரிச்சர்ட்ஸ் ப்ரூட் மிக்ஸர் கிரைண்டர்

வழக்கமான சுத்தம் அவசியம்:  பலர் செய்யும் தவறு என்னவென்றால், எப்போதுமே மிக்ஸி ஜார்களை மட்டுமே சுத்தம் செய்வார்கள். ஆனால் நீங்கள் மிக்ஸியையும் சுத்தம் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி.. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை.. மிக்ஸியை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக மிக்ஸியின் உட்புறத்தை டூத் பிரஷால் சுத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் மோட்டார் நன்றாகவும், நீண்ட நாளும்  வேலை செய்யும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதிகமாக அரைக்க வேண்டாம்: மிக்ஸி பயன்படுத்தும் போது பொறுமையும் தேவை. ஒரே நேரத்தில் மிக்ஸி ஜாரில் அதிகமாக வைக்க 
வேண்டாம். இதனால் மிக்ஸி பழுதடைய வாய்ப்பு அதிகம். அதுமட்டுமின்றி, ஜாரில் பிளேடுகள் கூர்மை குறைந்து விடும். எனவே, அளவோடு மிக்ஸி ஜாரில் வையுங்கள்.

click me!