தூத்துக்குடியில் மீண்டும் பேய்மழை! வெளுத்து வாங்கிய மழையால் நெல்லை, குமரியில் குளுகளு கிளைமேட்!

By SG BalanFirst Published May 14, 2024, 10:29 AM IST
Highlights

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து குளுகளு வானிலை காணப்படுகிறது.

சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து குளுகளு வானிலை காணப்படுகிறது.

நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் பகுதிகளில் கனமழை பெய்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ராதாபுரம், திசையன்விளை பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டியது. முக்கூடல், பாப்பாக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.

Latest Videos

மாதம்தோறு ரூ.2 லட்சம் பென்ஷன் கிடைக்கும்! 30 வயசுல சிம்பிளா இந்தத் திட்டத்தில் முதலீடு பண்ணுங்க!

தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத மழையை நினைவூட்டும் வகையில் பேய்மழை பெய்தது. தூத்துக்குடி, முத்தையாபுரம், பழையகாயல், ஆத்தூர் பகுதிகளில் கனமழை பெய்து கோடையின் சூட்டைத் தணித்தது. குமரியிலும் கனமழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்திலும் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. செங்கோட்டையில் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. சிவகிரி, தென்காசி சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால், குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளும் ஊர்மக்களும் அருவியில் ஆனந்தக் குளியல் போடுகின்றனர்.

| |

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 7.1 செ.மீ. மழை பதிவாகியுள்ளன | | pic.twitter.com/xP1ggTxtZX

— DD Tamil News (@DDTamilNews)

தமிழ்நாடு புதுச்சேரி காரைக்காலில் வரும் 18ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி? நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா?

click me!