மாதம்தோறு ரூ.2 லட்சம் பென்ஷன் கிடைக்கும்! 30 வயசுல சிம்பிளா இந்தத் திட்டத்தில் முதலீடு பண்ணுங்க!
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 22,150 ரூபாய் வீதம் 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், மாதம் ரூ.2 லட்சத்துக்கு மேல் பென்ஷன் கிடைக்கும்.
pension schemes for senior citizens
உங்களுக்கு தற்போது 30 வயதாக இருந்தால், நீங்கள் பணி ஓய்விற்குப் பிறகு ரூ.2 லட்சம் மாதாந்திர பென்ஷன் பெற விரும்பினால், ஓய்வு பெறும்போது ரூ.5 கோடி முதலீடு செய்திருக்க வேண்டும். இதற்கு தேசிய ஓய்வூதியத்த் திட்டத்தில் முதலீடு செய்தால் வருடத்திற்கு சராசரியாக 10 சதவீத வட்டி கிடைக்கும்.
pension plan for 30 yr old
இதற்கு ஒவ்வொரு மாதமும் சுமார் 22,150 ரூபாய் வீதம் 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். இதற்கு 10% வட்டி கிடைத்தால் ஓய்வு பெறும்போது சுமார் 5 கோடி ரூபாயாக மாறும். 30 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீடு சுமார் ரூ.79.74 லட்சமாக இருக்கும். இதன் மூலம் நீங்கள் சுமார் ரூ.4.21 கோடி திரும்பப் பெறுவீர்கள்.
pension plan with NPS
ஓய்வு பெறும்போது, உங்கள் முன் இரண்டு வாய்ப்புகள் இருக்கும். உங்கள் பணத்தை ஒரு வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்து, அதிலிருந்து ஓய்வூதியம் பெறத் தொடங்கலாம். அல்லது 60 சதவீதத் தொகையைத் திரும்பப் பெற்று, மீதமுள்ள 40 சதவீதத்துடன் வருடாந்திரத் திட்டத்தை உருவாக்கலாம்.
NPS pension scheme
முழு முதலீட்டையும் ஒரு வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்து அதில் இருந்து பென்ஷன் பெறுவதைத் தேர்வு செய்தால், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் முதலீடு செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
Retirement planning
தற்போதைய பிக்ஸட் டெபாசிட் விகிதங்கள் 6-7 சதவீதமாக உள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்து, ஓய்வுக்குப் பின் நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் பென்ஷன் பெறுபவர்களுக்கு குறைந்தபட்சம் 5 சதவீத வட்டி கிடைக்கும்.
Rs. 2 lakh Pension
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாதந்தோறும் ரூ.2 லட்சம் தேவை என்றால் ஆண்டுக்கு ரூ.24 லட்சம் வட்டி தேவை. 5 சதவீத வட்டியில் ரூ.24 லட்சம் உங்களுக்கு வேண்டுமென்றால், உங்களிடம் சுமார் ரூ.5 கோடி இருக்க வேண்டும். இதன் மூலம், ஆண்டுக்கு 5 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் சுமார் ரூ.25 லட்சம் வட்டி கிடைக்கும்.
senior citizen pension
30 வயதாகும் நபர் ஓய்வு பெறும்போது 5 கோடி ரூபாய் சேர்க்க விரும்பினால், ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.22,150 தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யவேண்டும். 30 ஆண்டுகளில் உங்கள் பணம் ஆண்டுக்கு 10 சதவீத வட்டியுடன் விகிதத்தில் சுமார் ரூ.5 கோடியாக மாறும்.
Rs. 5 Crore corpus for pension
30 ஆண்டுகளில் மொத்த முதலீடு சுமார் ரூ.79.74 லட்சமாக இருக்கும். சுமார் ரூ.4.21 கோடி வட்டி கிடைத்துவிடும். இந்த மொத்த தொகையையும் பிக்சட் டெபாசிட் கணக்கில் போட்டால், 5% வட்டியுடன் மாதம் தோறும் ரூ.2.10 லட்சத்திற்கு மேல் ஓய்வூதியம் பெறலாம்.