சீரியஸ் கண்டிஷனில் தீபாவின் தந்தை; மாமனாரின் ஆசையை நிறைவேற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

First Published Mar 8, 2024, 5:00 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கோகிலாவின் ஏற்பாட்டின் படி இருவர் வந்த தர்மலிங்கத்தை அவமானப்படுத்திய நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Karthigai deepam serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கோகிலாவின் ஏற்பாட்டின் படி இருவர் வந்த தர்மலிங்கத்தை அவமானப்படுத்திய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Zee Tamil Karthigai deepam serial

அதாவது இது எல்லாம் நினைத்து பார்த்த தர்மலிங்கம் மிகுந்த மனவேதனையில் இருக்க மைதிலி அவருக்கு ஆறுதல் சொல்ல தீபாவின் அம்மா ஜோதி பக்கத்திலிருந்து பார்த்துக் கொள்கிறார். இன்னொரு பக்கம் ரக்சன் தீபாவுக்கு போன் செய்து பாட கூப்பிட்டு இருந்த நிலையில் இங்கே தர்மலிங்கத்திற்கு உடம்பு முடியாமல் போக அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் சேர்க்க தீபாவின் அம்மா கார்த்திக்கு தகவல் கொடுக்கிறார். 

இதையும் படியுங்கள்... TV Actress Death: ஒரே வீட்டில்.. அடுத்தடுத்த மரணம்! சகோதரி இறந்த 24 மணிநேரத்தில் பிரபல நடிகை அதிர்ச்சி மரணம்!

Karthigai deepam serial Update

கார்த்திக் தீபாவிடம் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் என்று சொல்லி ஹாஸ்பிடல் வந்து பார்க்க தர்மலிங்கம் சீரியஸ் கண்டிஷனில் இருப்பதாக டாக்டர்கள் சொல்கின்றனர். படுக்கையில் கிடக்கும் தர்மலிங்கம் கார்த்தியை கூப்பிட்டு என் பொண்ணு எப்படியாவது பாட வச்சிடுங்க மாப்பிள என்று கெஞ்ச இந்த விஷயம் தீபாவுக்கு தெரிய வேண்டாம் என்று கார்த்திக் தர்மலிங்கம் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி வீட்டிற்கு கிளம்பி வருகிறான். 

Karthigai deepam serial Today Episode

தனது வீட்டிற்கு வந்து எல்லோரிடமும் விஷயத்தை சொல்லி தீபாவுக்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என்று சொல்கிறான். ஐஸ்வர்யாவிடமும் அண்ணி உங்ககிட்ட ரெக்வெஸ்ட்டா கேட்டுக்குறேன் இந்த முறையாவது எனக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... புஷ்பா 2, இந்தியன் 2 ஆகிய படங்களின் எதிர்பார்ப்பை மிஞ்சிய 'ஆடுஜீவிதம்'! புக் மை ஷோவில் மெர்சல் செய்த ரசிகர்கள்

click me!