Kamalhaasan : தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக்கில் இணைந்தார் கமல்ஹாசன்... ஆனால் நடிகராக அல்ல...!

First Published Mar 21, 2024, 1:12 PM IST

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இளையராஜாவின் பயோபிக்கில் தானும் பணியாற்றுவதை அறிவித்துள்ளார் கமல்ஹாசன்.

Ilaiyaraaja Biopic

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை கதை படமாக உருவாக இருக்கிறது. இளையராஜா என்கிற பெயரிலேயே உருவாகும் இப்படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். தனுஷை வைத்து அவர் இயக்கும் இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு முன்னர் இருவரும் கேப்டன் மில்லர் படத்தில் பணியாற்றி இருந்தனர். மேலும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவே இசையமைக்க உள்ளார்.

Ilaiyaraaja Biopic poster

ஹிப்ஹாப் ஆதிக்கு அடுத்ததாக தன்னுடைய பயோபிக்கிற்கு தானே இசையமைக்கும் இசையமைப்பாளர் என்றால் அது இளையராஜா. இதற்கு முன்னர் ஹிப்ஹாப் ஆதி தனது பயோபிக் படமான மீசைய முறுக்கு படத்துக்கு இசையமைத்து இருந்தார். மேலும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தின் பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இதில் பாரதிராஜா, கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்... Suriya : சூர்யா இல்ல.. Rolex கேரக்டரில் நடிக்க லோகேஷின் முதல் சாய்ஸாக இருந்த ‘அந்த’ மாஸ் நடிகர் யார் தெரியுமா?

Ilaiyaraaja Biopic

இந்நிலையில், இளையராஜா பயோபிக் பற்றிய மற்றுமொரு மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு திரைக்கதை அமைக்க உள்ளது நான் தான் என நடிகர் கமல்ஹாசனே அறிவித்து இருக்கிறார். நேற்று சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட கமல்ஹாசன், அப்போது இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டு இருக்கிறார். இதனால் இளையராஜா பயோபிக் மேலும் வலு சேர்த்து உள்ளது.

Ulaga Nayagan Kamalhaasan

நடிகர் கமல்ஹாசன் இதற்கு முன்னதாக ஆளவந்தான், அன்பே சிவம், குறுதிப்புனல், காதலா காதலா, மகாநதி, மைக்கேல் மதன காமராஜன், பஞ்சதந்திரம், தேவர்மகன், தூங்காவனம், உத்தம வில்லன், விக்ரம் போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை அமைத்திருக்கிறார். அந்த வரிசையில் தற்போது லேட்டஸ்டாக இளையராவின் பயோபிக்கும் இணைந்துள்ளது. 

இதையும் படியுங்கள்... பர்சனல் வாழ்க்கையில் விழுந்த இடி! கேரியரை கோட்டை விட்ட.. வரலட்சுமி சரத்குமார்! அவரே கூறிய ஷாக் தகவல்!

click me!