இளமை திரும்புதே.. புரியாத புதிராச்சே! 69 வயதிலும்... யங் லுக்கில் உலக நாயகன் கமல்! வைரலாகும் போட்டோஸ்!

First Published Mar 12, 2024, 4:21 PM IST

உலக நாயகன் கமல்ஹாசன், புதிய லுக்கிற்கு மாறி... எடுத்து கொண்டுள்ள போட்டோஸ் தற்போது சமூக  வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

உலக நாயகன் கமல்ஹாசன் 'விக்ரம்' படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிப்பு, தயாரிப்பு என இரண்டிலும் கவனம் செலுத்தி வருவதோடு, அவ்வப்போது அரசியல் களப்பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் நடித்து முடித்துள்ள கமல் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வரும் 'தக் லைஃப்' படத்தில் நடித்து வருகிறார்.

திரைப்படங்களில் கவனம் செலுத்திக்கொண்டே.. இவர் அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வருவது மிகப்பெரிய விமர்சனங்களுக்கு ஆளானது. மேலும் நாடாளு மன்ற தேர்தலை திமுக கட்சியுடன் இணைந்து சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜுடன் இணையும் துருவ் விக்ரம்..! ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான தூள் அப்டேட்!

கடந்த வாரம் தொகுதி பங்கீடு குறித்து, திமுக கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசிய கமல்... சந்திப்புக்கு பின்னர், ஒரு தொகுதி கூட திமுக கட்சி கொடுக்காததால் இந்தமுறை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் யாரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், மாறாக திமுகவுக்கு ஆதரவு கொடுக்க உள்ளதை அறிவித்தார். சில வருடங்களுக்கு முன் திமுகவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து கமல் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், தற்போது அந்தர் பல்டி அடித்ததையும் நெட்டிசன்கள் சுட்டி காட்டி விமர்சித்தனர்.

இது ஒரு புறம் இருக்க... செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் கமல்ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 69 வயதிலும் பிளாக் அண்ட் பிளாக் ட்ரெஸ்ஸிங்கில் இளம் ஹீரோக்களுக்கே சவால் விடும் அளவில் உள்ளது கமல்ஹாசனின் தோற்றம். இந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

உஷார்! BTSக்கு அடிமையாகும் இளசுகள்! பெற்றோருக்கு ஷாக் கொடுத்த பெண்.. எச்சரிக்கும் மனநல ஆலோசகர்!

click me!