Indriya Rasipalan: விருச்சிகம் ராசியினருக்கு கிரகங்கள் மாற்றம் சாதகமான இருக்கும்...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்

First Published May 25, 2022, 6:01 AM IST

Indriya Rasipalan 25 may 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, சிம்மம், விருச்சிகம், மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நேரத்தில் கிரகங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அதேபோன்று, துலாம், கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நேரத்தில் வீடு, சொத்து வாங்கும் போது சிந்தித்து செயல்படுவது அவசியம். இன்றைய 12 ராசிகளின் பலன்கள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Aries Zodiac -Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மேஷம்:

 உங்கள் செயலால் உங்களுக்கு நல்ல பெயர் உண்டாகும். அரசியல் விஷயத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும். நெருங்கியவரின் ஆலோசனை பெறலாம். சிலர் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். இந்த நேரத்தில் உங்கள் நிதி நிலை மேம்படும்.செலவுகளை குறைத்து  கொள்வது அவசியம். வேலை தேடுபவர்கள் நல்ல வேலை கிடைக்கும். தாம்பத்தியத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். லேசான இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்படலாம்.

Taurus Zodiac

ரிஷபம்:

நீங்கள் இந்த நேரத்தில் ஆளுமை செலுத்துவீர்கள். மதச் செயல்பாடுகள் மற்றும் ஆன்மீகச் செயல்களில் ஆர்வம் காட்டுவது நேர்மறை ஆற்றலை கொடுக்கும். வெளிப்புற நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்துங்கள். இளைஞர்களை நல்வழிப்படுத்துங்கள். குழந்தைகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறை கொள்ளுங்கள்.வியாபார நடவடிக்கைகள் சாதாரணமாக இருக்கும். தனிமையில் இருப்பவர்களுக்கு நல்ல உறவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்.

Gemini Zodiac

மிதுனம்:

எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் சுயமரியாதை, தன்னம்பிக்கையை குலைத்துவிடக் கூடாது. இந்த நேரத்தில் கிரகங்கள் சாதகமான நிலையில் இருக்கும். நிதி விஷயங்களை சிறப்பாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். அதிகப்படியான வேலை சில நேரங்களில் கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். உங்கள் சுயமரியாதையை குறைத்து கொள்ளுங்கள். யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலையிடாதீர்கள். வணிக நடவடிக்கை தொடர்பான வேலைகள் மிகவும் வெற்றிகரமாக முடியும். கணவன்-மனைவி உறவு மேம்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Cancer Zodiac

கடகம்:

சொத்து சம்பந்தமான வேலைகள் சாதகமான பலனைத் தரும். எனவே உங்கள் செயல்களில் முழுமையாக உறுதியுடன் இருங்கள். இன்று மதம் மற்றும் செயல்கள் தொடர்பான விஷயங்களிலும் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள்.  நிதி தொடர்பான விஷயங்களில் தவறான செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இந்த நேரத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். மாணவர்கள் தங்கள் இலக்குகளை நோக்கி கடினமாக உழைக்க வேண்டும். இன்று உங்களின் வணிக பயணம் உங்களுக்கு சிறந்த எதிர்காலத்திற்கு வழி வகுக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவக்கூடும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Leo Zodiac


சிம்மம்:

மாணவர்கள், இளைஞர்களின் தொழில் பிரச்சனைக்கு தீர்வு காண்பது அவசியம். இந்த நேரத்தில் கிரக மாற்றம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்கும் யோகம் பிறக்கும். எதிரிகள் உங்களை வருத்தப்பட செய்யலாம். இயந்திரம், ஊழியர்கள் போன்றவற்றில் சிறிய அல்லது பெரிய பிரச்சனை இருக்கலாம். காதல், திருமணம் தொடர்பான காரியங்கள் கைகூடும். நீரிழிவு நோயாளிகளை தொடர்ந்து பரிசோதிக்கவும்.

Virgo Zodiac

கன்னி:

நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகள் முடிவடையும். புத்திசாலித்தனமாக செயல்படுவது உங்களுக்கு சாதகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான எந்த வேலையும் ஒருவரின் தலையீட்டால் சுமூகமாக முடிவடையும். பணத்தை அதிகம் நம்பி இருக்காதீர்கள். உணர்ச்சிவசத்தால் எடுக்கப்பட்ட சில முடிவு தீங்கு விளைவிக்கும். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் யோசியுங்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படலாம். உடலில் பலவீனம் ஏற்படும்.

Libra

துலாம்:

இந்த நேரத்தில் வீடு, சொத்து வாங்கும் போது சிந்தித்து செயல்படுவது அவசியம்.  உங்களை சுற்றியுள்ள எதிர்மறையான விஷயங்களும் உங்களை மனச்சோர்வடையச் செய்யலாம் உங்கள் மனநிலையை நேர்மறையாக வைத்திருங்கள். இந்த நேரத்தில் எந்த விஷயங்களிலும் சிந்தித்து செயல்படுவது அவசியம். பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். காதல் கைகூடும். சுப காரியம் நடைக்கும். ஆரோக்கியமற்ற உணவு வாயு பிரச்சனையை ஏற்படுத்தும்.

Scorpio

விருச்சிகம்:

கிரகங்களின் நிலை மிகவும் சாதகமாக இருக்கும். எல்லா செயல்களிலும் வெற்றி நிச்சயம். சுப காரியங்களை செய்து முடிப்பதன் மூலம் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் விவேகத்துடனும் புத்திசாலித்தனத்துடனும் எடுக்கும் முடிவு மிகவும் சாதகமாக இருக்கும். அதிகமாக செலவு செய்வதையோ அல்லது கடன் வாங்குவதையோ தவிர்க்கவும். நீங்கள் ஏதாவது வாக்குறுதி அளித்திருந்தால், அதை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். இல்லையெனில், உங்கள் எண்ணம் கெட்டுவிடும். மாணவர்கள் படிப்பை அலட்சியப்படுத்தக் கூடாது. இளம் நட்புகள் காதலாக மாறலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

தனுசு:

பணப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது நிம்மதி தரும். சில சிரமங்கள் இருந்தாலும், உங்கள் நேர்மறை மற்றும் சீரான சிந்தனையுடன் முன்னேறுவீர்கள். வேலையில் தோல்வியை அனுபவிப்பார்கள். உங்களுக்கு நிதி ரீதியாக மிகவும் சாதகமாக இல்லை. சில நேரங்களில் உங்கள் கவனம் உங்களை தவறான செயல்களுக்கு கொண்டு செல்லும். வியாபாரத்தில் எந்த முடிவையும் எடுக்கும்போது குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையைப் பெறவும். குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.

Capricorn

மகரம்:

அதிக வேலை பளு காரணமாக சோர்வாக உணர்கிறீர்கள். எனவே இந்த நாளை நிம்மதியாக கழிக்க முயற்சி செய்யுங்கள். மதச் செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். மனதில் அமைதியின்மை, கோபம் என்ற நிலை எப்போதும் இருக்காது. உங்கள் குறைபாடுகளை நினைக்காதீர்கள். இந்த நேரத்தில் வதந்திகள் போன்ற செயல்களில் இருந்து விலகி இருங்கள். பெரியவர்களின் வழிகாட்டுதலைப் புறக்கணிப்பது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். திருமணம் இனிமையாக அமையும். வேலையுடன், உடல் மற்றும் மன ஓய்வும் தேவைப்படும்.

Aquarius

கும்பம்:

இன்றைய நேரம் மிகவும் திருப்திகரமாக இருக்கும். அவசரப்படாமல், நிதானமாக வேலையைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். நிலைமை உங்களுக்குச் சாதகமாக அமையும். சில நெருங்கிய நபர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். யாரிடமும் அதீத நம்பிக்கை வேண்டாம். வணிகத்தில், நீங்கள் கடன் வாங்கி இருந்தால் இந்த நேரத்தில் அதிக எச்சரிக்கையாக இருங்கள். ஏதேனும், குழப்பம் ஏற்பட்டால் உங்கள் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையைப் பெறவும்.  

( Pices)

மீனம்:

வாழ்க்கையைப் பற்றிய நேர்மறை மற்றும் சமநிலையான சிந்தனை உங்களுக்கு உண்டாகும். இளைஞர்கள் எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி பெறலாம். இந்த நேரத்தில் மன மகிழ்ச்சியாக இருங்கள். சொத்து தொடர்பாக ஏதேனும் தகராறு இருந்தால், உறவினர் தலையிட்டு அதைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு வழங்கும் உதவிகளில் அதிக பாகுபாடு காட்டப்படுவீர்கள். தொழில் நடவடிக்கைகள் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்துடன் பொழுதுபோக்கிலும் நேரத்தை செலவிடலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க ...Rahu Peyarchi: ராகு கேதுவின் அருளால் கோடீஸ்வர யோகம்..அடுத்த ஒரு வருடத்திற்கு இந்த 4 ராசிக்காரங்க காட்டுல பணமழை

click me!