தனுசு, மகரம் ராசியினருக்கு கிரகங்களின் சாதக பலன்...பேர் அதிர்ஷ்டம் உண்டாகும்..? இன்றைய 12 ராசிகளின் பலன்கள்

First Published May 27, 2022, 5:01 AM IST

Horoscope Today- Indriya Rasipalan 27 May 2022: துலாம், தனுசு, மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு கிரகங்களின் சாதக பலன்..இவர்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி கதவை தட்டும். இருப்பினும், கன்னி, மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் அவசியம். இன்றைய 12 ராசிகளின் பலன்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மேஷம்:

இன்று கடின உழைப்பு அவசியம். நீண்ட நாள் எதிர்பார்த்த விஷயம் இன்று உங்களுக்கு வெற்றியை தரும். குடும்ப நலனில் உங்களுக்கும் முழு பங்குண்டு. நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் தவறான புரிதல்கள் ஏற்படலாம். அதனால் உறவில் விரிசல் ஏற்படும். குழந்தைகளின் செயல்பாடுகளில் அக்கறை அவசியம். திருமண வாழ்கை இனிமை இருக்கும். உடல்நிலை சீராக இருக்கும்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

ரிஷபம்:

மாறிவரும் பொருளாதார நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். கடன் வாங்கி தொழில் செய்யாதீர்கள்.  குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். எந்த வேலையை துவங்குவதற்கு முன்பு பலமுறை சிந்தித்து செயல்படுவது அவசியம். கணவன்-மனைவி உறவு இனிமையாக இருக்கும். ஆரோக்கியமற்ற  உணவு உண்பதால் உடல் உபாதைகள் ஏற்படும்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மிதுனம்:

இன்று உங்கள் காரியம் வெற்றியை தரும். உங்கள் குடும்பத்தினருடனும் நெருங்கிய உறவினர்களுடனும்  நேரம் செலவிடுங்கள். இல்லையெனில், இந்த நேரத்தில் நெருங்கிய உறவுகளுடன் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். தொழிலில் சாதகமான பலன் உண்டு. தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, எச்சரிக்கை அவசியம்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction


கடகம்:

மற்றவர்களை நம்பாமல், உங்களை நம்பி முடிவு எடுங்கள். நீண்ட நாள் செய்த வேலையின் பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் நூலிழையில் உங்கள் வெற்றி கையை விட்டுப் போகலாம். இந்த நேரத்தில் உங்கள் ஈகோவைக் கட்டுப்படுத்துங்கள், அது உங்கள் சுயமரியாதையைக் கெடுக்கும். பணியிடத்தில் சில முன்னேற்றம் காணப்படும். தம்பதியினருடன் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தசை வலி தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

சிம்மம்:

குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வரும் குழப்பம், விலகும். வீட்டில் ஒருவரின் திருமணம் தொடர்பான சுப காரியங்கள் திட்டமிடப்படும். அண்டை வீட்டாருடன் விரிசல் அல்லது பிரச்சனை உண்டாகும். எனவே, தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். குழந்தைகளின் பிரச்சனைகளை தீர்க்க உங்கள் ஒத்துழைப்பு அவசியம். குடும்ப சலசலப்பு  காரணமாக வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த முடியாது. உங்கள் பிரச்சனைகள் பற்றி உங்கள் மனைவியிடம்  சொல்லாதீர்கள். பிரச்சனைகள் பெரிதாகும்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கன்னி:

சமூக, அரசியல் பணிகளில் நேரத்தை செலவிடுவீர்கள்.பெரியோர்களின் ஆசிகளும், வாழ்த்துகளும் உங்களுக்கு ஒரு வரமாக இருக்கும். பிறரிடம் பேசும்போது வார்த்தைகளில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். உங்களின் சில எதிர்மறையான வார்த்தைகள் மற்றவர்களை காயப்படுத்தி உறவை கெடுக்கலாம். உங்களைப் பற்றி முக்கியமான விஷயங்களை யாரிடமும் சொல்லாதீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் பெரிய ஒப்பந்தம் நடக்கும். திருமண வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். 
 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

துலாம்:

இன்று கிரகங்களின் நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவு உங்கள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். அதிக சிந்தனையுடன் உங்கள் வேலையை மீண்டும் தொடங்குவது அவசியம். ஈகோவுக்கு அடிபணியாமல் கவனமாக இருங்கள். குழந்தைகள் பிரச்சனைகளை தீர்க்க உதவலாம். தொழிலில்  நேரம் நன்றாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் பிரச்சனை ஏற்படலாம். ஆரோக்கிய குறைபாடு இருக்கலாம்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

விருச்சிகம்:

குடும்பத் தகராறுகளை உறவுகள் முன்னிலையில் தீர்க்கலாம். அதனால் உங்கள் உறவு மீண்டும் இனிமையாக மாறும். குழந்தைகளின் கல்வி மற்றும் தொழில் சம்பந்தமான முக்கிய முடிவுகள் சாதகமாக இருக்கும். திடீரென்று செலவுகள் ஏற்படும். தற்போது நிதி நெருக்கடி இருக்கலாம். எந்த விஷயத்திலும் பொறுமை அவசியம். பணியிடத்தில் சில சவால்கள் இருக்கலாம். வேலையில் ஏற்படும் சோம்பல் குடும்ப வாழ்க்கையை பாதிக்கும். அதிக வேலை மன அழுத்தம் மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கும்.

Capricorn -Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மகரம்:

உங்கள் முக்கியமான வேலைகளை தொடங்க இன்றுதான் சரியான நேரம். கிரக நிலை உங்களுக்கு சாதகமாக உள்ளது. உங்கள் திறமைகளையும், ஆற்றலையும் அதிகம் பயன்படுத்துங்கள். நீங்கள் ஒரு வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கு சரியான நேரம் இதுவாகும். உங்கள் வியாபாரத்தில் பெரிய ஆர்டர்களுக்கு வழிவகுக்கும். வீடு மற்றும் வியாபாரத்தில் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியளிக்கும். அதிக உழைப்பு சோர்வை ஏற்படுத்தும்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

தனுசு:

இந்த நேரத்தில் கிரக நிலைகளும், அதிர்ஷ்டமும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் திறமையும் வெளிப்படும். உங்கள் திறமைகளை பயன்படுத்த உங்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் வாக்குவாதம் ஏற்படும். மாணவர்களும் இளைஞர்களும் தங்கள் இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். உங்களின் கடின உழைப்பாலும், தொழிலில் அர்ப்பணிப்பாலும் சரியான பலன்களைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 

இந்த நேரத்தில் கிரக நிலைகளும், அதிர்ஷ்டமும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் திறமையும் வெளிப்படும். உங்கள் திறமைகளை பயன்படுத்த உங்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் வாக்குவாதம் ஏற்படும். மாணவர்களும் இளைஞர்களும் தங்கள் இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். உங்களின் கடின உழைப்பாலும், தொழிலில் அர்ப்பணிப்பாலும் சரியான பலன்களைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 

(Aquarius) -Jothidar Chirag Daruwalla- Astrology Prediction


கும்பம்:

இன்று உங்கள் திறமைகளை மேம்படுத்துங்கள். உங்களுக்காக சாதனைகள் படைக்க வேண்டிய நேரம் இது. சமுதாயத்தில் எந்த ஒரு சிறப்பான சாதனைக்கும் நீங்கள் கௌரவிக்கப்படுவீர்கள். உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு சிலர் பொறாமைப்படுவார்கள். இவற்றையெல்லாம் புறக்கணித்து, உங்கள் எண்ணத்தைமகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். வணிகம் தொடர்பான செயல்பாடுகள் லாபகரமாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் சுமுகமான உறவு இருக்கும். 

Pisces -Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மீனம்:

இன்று நீங்கள் அன்றாட வேலைகளை தவிர்த்து, உங்கள் பொழுதுபோக்கு தொடர்பான சில செயல்களில் நேரத்தை செலவிடுங்கள். எனவே நீங்கள்  பலமாக உணர்வீர்கள். வீட்டு வேலைகளில் ஈடுபடலாம். இன்று வேலை துவங்க சிறப்பாக நேரமாகும். நண்பர் சந்திப்பதால் வாக்குவாதம் ஏற்படும். தொழில் நடவடிக்கைகள் மந்தமாக இருக்கலாம். குடும்ப சூழ்நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் அவசியம். 
 

click me!