பிளாப் ஆன படத்தை கூட வலைவீசி தேடிருக்காங்க! 2023ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 இந்திய படங்கள் லிஸ்ட் இதோ

First Published Dec 12, 2023, 12:21 PM IST

ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் டாப் 10 பட்டியலை வெளியிடும் கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட இந்திய படங்களின் லிஸ்ட்டை வெளியிட்டு உள்ளது.

most searched Indian films on Google

2023-ம் ஆண்டு முடிவடைய இன்னும் இரு வாரங்களே எஞ்சி உள்ள நிலையில், உலகின் முன்னணி தேடுதள நிறுவனமான கூகுள், இந்த ஆண்டுக்கான தரவுகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட படங்களின் டாப் 10 பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதில் என்னென்ன படங்கள் இடம்பெற்று உள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Jawan

கூகுளில் இந்த ஆண்டு அதிகளவில் தேடப்பட்ட இந்திய படங்களின் பட்டியலில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல் சன்னி தியோல் நடிப்பில் வெளிவந்த கடார் 2 என்கிற இந்தி படம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தை ஓப்பன்ஹெயிமர் என்கிற ஹாலிவுட் படம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ். பிரபாஸ் நடிப்பில் வெளியான இப்படம் அட்டர் பிளாப் ஆனாலும் இதனை ரசிகர்கள் வலைவீசி தேடி இருப்பது இந்த தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Adipurush

அடுத்ததாக ஷாருக்கானின் பதான் திரைப்படத்திற்கு இந்த பட்டியலில் 5-வது இடம் கிடைத்துள்ளது. சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான சர்ச்சைக்குரிய படமான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட படங்கள் பட்டியலில் 6-வது இடத்தை பிடித்து இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக 7-வது இடத்தில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் உள்ளது.

Jailer, Leo

இந்த பட்டியலில் கடைசி மூன்று இடத்தில் இரண்டு இடம் விஜய் படங்களுக்கு கிடைத்துள்ளது. விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த லியோ மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் முறையே 8 மற்றும் 10-வது இடத்தை பிடித்துள்ளன. பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த டைகர் 3 திரைப்படம் இந்த பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... மாப்பிள்ளையா இல்ல... மரண மாஸ் ரசிகனாக ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன தனுஷ் - வைரலாகும் பதிவு

click me!