RRR பட ஹீரோக்களை குறிவைத்த ஜான்வி! ஜூனியர் என்டிஆரை தொடர்ந்து ராம் சரணுக்கு ஜோடியாகிறார்!

First Published Mar 6, 2024, 11:50 AM IST

'குளோபல் ஸ்டார்' ராம்சரண் நடிக்கும் RC16-வது படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கும் தகவல் உறுதியாகி உள்ளது.
 

Ram Charan

'குளோபல் ஸ்டார்' ராம்சரண் அடுத்ததாக 'உப்பென்னா' புகழ் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக உருவாகும் #RC16 படத்தில் நடிக்கிறார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு தயாரிப்பாளராக களம் இறங்குகிறார். அவருடைய விருத்தி சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் தயாராகிறது.

இந்த திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார். இன்று அவரது பிறந்தநாள் என்பதால், அவரை பட குழுவினர் வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஜோடி  ரசிகர்கள் விரும்பும் வகையில் மயக்கும் கெமிஸ்ட்ரியை திரையில் வழங்குவர். 

Goundamani Networth: 84 வயதிலும் ஹீரோவாக நடிக்கும்.. காமெடி கிங் கவுண்டமணியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

இந்த மெகா முயற்சிக்கு ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இயக்குநர் புச்சி பாபு ஆற்றல் வாய்ந்த திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். அது உலகளாவிய ரசிகர்களின் கவனத்தை கவரும். இந்த திரைப்படத்தில் இடம்பெறும் ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விவரங்களை தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள். 
 

ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகியுள்ள தேவாரா படத்தில், ஜூனியர் NTR-க்கு ஜோடியாக நடித்துள்ள நிலையில், இதை தொடர்ந்து ராம் சரணுக்கு ஜோடியாகிறார். எனவே ரசிகர்கள் RRR பட ஹீரோக்களை டார்கெட் செய்து ஜான்வி கபூர் ஜோடி போடுவதாக தங்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Jason Sanjay: இவரு நம்ப லிஸ்டுலையே இல்லையே பாஸ்! குட்டி தளபதி இயக்கும் படத்தின் ஹீரோ இந்த நடிகரின் மகனாம்!

click me!