Janhvi: மாஜி காதலருடன் பிறந்தநாள் பார்ட்டியில் கூத்தடிக்கும் ஜான்வி கபூர்..யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா

First Published May 27, 2022, 3:23 PM IST

Janhvi Kapoor & Ishaan Khatter reunited: ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், தன் முன்னாள் காதலரான இஷான் கட்டாருடன் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில்  எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

janhvi kapoor

இந்திய சினிமாவில் பிரபல ஜோடியாக புகழ் பெற்ற நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியரின் செல்ல மகள் ஜான்வி கபூர்.பாலிவுட் 'தடக்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஜான்வி கபூர், தனது முதல் படத்திலேயே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும்  நல்ல வரவேற்பை பெற்றார். மேலும், இவர் தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

janhvi kapoor

ஜான்வி கபூர், இந்த படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் இஷான் காட் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பாலிவுட் பிரபல நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி தான் இஷான் காட். இருவரின் காதல், வீட்டிற்கு தெரிய வர ஜான்வி, இஷானின் காதலுக்கு போனி கபூர் பச்சைக்கொடி காட்டினார். இருப்பினும், சில நாட்களில் ஜான்விக்கும், இஷானுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள்.

janhvi kapoor

இதையடுத்து, படங்களில் பிஸியாக நடிக்க துவங்கிய ஜான்வி கோஸ்ட் ஸ்டோரிஸ்' மற்றும் 'குஞ்சன் சக்சேனா போன்ற திரைப்படங்களில் நடித்து பாலிவுட்டில் பாஸிட்டிவான விமர்சனத்தை பெற்றார். இதையடுத்து, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர ஜான்வி கபூர் தற்போது, குட் லக் ஜெர்ரி, மிலி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி ஆகிய படங்களில் ராஜ்குமார் ராவுடன் மற்றும் பாவால் வருண்  தவானுடன் நடிக்கிறார் .

janhvi kapoor

இணையத்தில், படு ஆக்டிவாக வலம் வரும், ஜான்வி அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருவார். இவரை, இன்ஸ்டாகிராமில் மட்டும் இதுவரை 15 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பின் தொடர்கிறார்கள். 

janhvi kapoor


இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குநரான கரண் ஜோஹரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த ஜான்வி அங்கு தனது முன்னாள் காதலர் இஷானை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இஷானுடன் சேர்ந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.

janhvi kapoor

முன்னதாக, ஜான்வியை பிரிந்த இஷான் நடிகை அனன்யா பாண்டேவை காதலித்து வந்த நிலையில், இருவரும் அண்மையில் பிரேக்கப் செய்து கொண்டனர். இந்த நிலையில், மீண்டும் இருவரும் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

மேலும் படிக்க....30 வயதில் பாதிரியார்...83 வயதில் ஆபாச பட நடிகர்...செக்ஸ் ஆன்மிகத்திற்கு ஒப்பானது..? பகீர் கிளப்பிய மத போதகர்!!

click me!