காலேஜ் ஸ்டுடென்டாக மாறிய "ராஜாக்கண்ணு".. பரபரப்பாக நடந்து முடிந்த படப்பிடிப்பு - ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்ஸ் இதோ!

First Published Nov 30, 2023, 7:26 AM IST

Actor Manikandan Next Movie : சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று, மிமிகிரி கலைஞராக தனது வாழ்க்கையை துவங்கி. பின் பல வசனகர்த்தாவாக உருமாறி, இன்று ஒரு நல்ல நடிகராக வளம்வருபவர் தான் நடிகர் மணிகண்டன்.

Actor Manikandan

சினிமாவின் மீது கொண்ட ஆசையின் காரணமாக சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று, தனது கலைப்பயணத்தை தொடங்கிய நடிகர் தான் மணிகண்டன். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான "பீட்சா 2" திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ச்சியாக ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Nayanthara: நயன்தாரா பிறந்தநாளுக்கு காஸ்டலி காரை கிஃப்டாக கொடுத்த விக்கி! விலை மட்டும் இத்தனை கோடியா?

Actor Manikandan Next Movie

அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கி வெளியிட்ட "விக்ரம் வேதா" திரைப்படத்தில் சந்தானம் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல், அந்த படத்திற்கு வசனகர்த்தாவாகவும் விளங்கினார் மணிகண்டன். இதற்காக அவருக்கு சிறந்த வசனகர்த்தா விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அவர் நடித்த "காலா" அவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

Actor Manikandan Movie

இந்த சூழலில் தான் கடந்த 2021 ஆம் ஆண்டு ஞானவேல் இயக்கத்தில் வெளியான சூர்யாவின் "ஜெய் பீம்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்த ராஜாக்கண்ணு என்கின்ற கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து தற்பொழுது பல திரைப்படங்களில் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார். 

இறுதியாக அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான "குட் நைட்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது இயக்குனர் வியாஸ் என்பவர் இயக்கும் ஒரு திரைப்படத்தில் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார். தற்பொழுது இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், இன்று இந்த படம் குறித்த தகவல்கள் வெளியாக உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!