சிங்கப்பூர் சலூன் சக்சஸ் மீட்... இயக்குனருக்கு தங்க செயின் பரிசளித்து பட வாய்ப்பையும் கொடுத்த ஐசரி கணேஷ்

First Published Feb 1, 2024, 3:55 PM IST

சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் சக்சஸ் மீட்டில் இயக்குனர் கோகுலுக்கு தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

singapore saloon

குடியரசு தின விடுமுறைக்கு தமிழ் சினிமாவில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆன படங்கள் தான் சிங்கப்பூர் சலூன் மற்றும் ப்ளூ ஸ்டார். இதில் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கி இருந்தார். அதேபோல் ப்ளூ ஸ்டார் படத்தை பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜெய்குமார் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார்.

singapore saloon movie team

இந்த இரண்டு படங்களும் புரமோஷனே வேற லெவலில் செய்திருந்தனர். குறிப்பாக சிங்கப்பூர் சலூன் படக்குழுவும், ப்ளூ ஸ்டார் படக்குழுவும் இணைந்து கிரிக்கெட் மேட்ச் ஆடி புரமோஷன் செய்தது வேறலெவலில் ரீச் ஆனது. இதையடுத்து ஜனவரி 25-ந் தேதி ரிலீஸ் ஆன இந்த இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தன.

இதையும் படியுங்கள்... ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன்... சூப்பரா? சுமாரா? - முழு விமர்சனம் இதோ

singapore saloon success meet

இதன்காரணமாக நேற்று ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக அப்படத்தின் சக்சஸ் மீட் நடத்தப்பட்டது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த நிலையில், இன்று சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், அப்படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடத்தப்பட்டது. இதில் ஆர்.ஜே.பாலாஜி உள்பட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.

singapore saloon success meet photos

இந்த சக்சஸ் மீட்டில் இயக்குனர் கோகுலுக்கு தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தனது தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தை கோகுல் தான் இயக்க உள்ளார் என்கிற சர்ப்ரைஸ் அறிவிப்பையும் வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதனால் மகிழ்ச்சியில் திளைத்துபோன கோகுல் அவருக்கு நன்றி தெரிவித்தார். அது என்ன படம் என்கிற தகவலை அவர்கள் வெளியிடவில்லை.

இதையும் படியுங்கள்... டாப் ஹீரோவுக்கு ஜோடி... ஜாக்பாட் வாய்ப்பை தட்டிதூக்கியதால் செம்ம குஷியில் நடிகை ஸ்ரீ திவ்யா

click me!