Chandramukhi 2 Heroine: சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகாவும் இல்லை, கியாராவும் இல்லை..அப்ப கதாநாயகி யார் தெரியுமா?

First Published Jun 16, 2022, 12:04 PM IST

Chandramukhi 2 Heroine: சந்திரமுகி 2 படத்தில், மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஜோதிகாவின் கதாபாத்திரத்தில், யார் நடிக்க உள்ளார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

chandramukhi 2

பி.வாசு இயக்கத்தில் , ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து 2005ல் வெளியான படம் சந்திரமுகி. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இது 1993ம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மணிச்சித்திரத்தாழு படத்தின் ரீமேக் ஆகும் .

chandramukhi 2

இதன்பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ்  நாயகனாக நடிக்கிறார். இதை உறுதி செய்யும் விதமாக சந்திரமுகி 2 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது லைகா தயாரிப்பு நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்டது. 

chandramukhi 2

இதன், இரண்டாம் பாகம் முழுவதும் சந்திரமுகி, வேட்டையன் ராஜா கதாபாத்திரங்களை காட்டப்போகிறார்களாம். அதாவது சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் வேட்டையன் மன்னன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் முழுக்க வேட்டையன் மன்னன், சந்திரமுகி இடையே நடக்கும் மோதல் தான் என்று கூறப்படுகிறது.

chandramukhi 2

வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான தகவலை நடிகை ஜோதிகா மறுத்தார். இதையடுத்து, இந்த படத்தில், பிரபல பாலிவுட் நடிகை கியார அத்வானி ஜோதிகா நடிக்க உள்ள கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் நடிக்கவில்லை என்று தகவல் வெளியானது. 

chandramukhi 2

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக ராஷி கன்னா அல்லது ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 மேலும் படிக்க...நயன்தாராவிற்கு அடுத்தடுத்து வந்த சோதனை...கோவில் கோவிலாக போக இதுதான் காரணம்? கடும் அப்செட்டில் விக்னேஷ் சிவன்..

click me!