தலைக்கேறிய காமம்! தாலி கட்டிய புஷருன் தலையில் கல்லை போட்ட மனைவி! கோர்ட் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா?

First Published Sep 14, 2023, 12:54 PM IST

கணவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ராணிப்பேட்டை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த கொண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (35). இவரது மனைவி அமலா (34). காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு  இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில்,  விநயாகமூர்த்தி நண்பன் ரமேஷ் அடிக்கடி வீட்டுக்கு சென்று வந்த நிலையில் அவருடன் அமலாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

நாளடைவில் இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவி அமலாவை கண்டித்துள்ளார். கள்ளக்காதலனுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை திட்டமிட்டனர். அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதியன்று மது அருந்திக்கொண்டிருந்த விநாயகமூர்த்தி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். பின்னர், கிணற்றில் விழுந்து உயிரிழந்தது போல் செய்துள்ளனர். 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை மனைவி அமலா மற்றும்  ரமேஷ் ஆகியோர் கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராணிப்பேட்டை 2-வது கூடுதல் அமர்வு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அனைத்து விசாரணைகளும் முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ரமேஷ் மற்றும் அமலா ஆகிய இருவருக்கும் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், தடயத்தை அழித்ததற்காக தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், இருவருக்கும்  தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜான்சுந்தர்லால் தீர்ப்பு வழங்கினார். 

click me!