School College Holiday: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கலெக்டர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

First Published Jun 20, 2024, 2:23 PM IST

நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Nellaiappar Temple

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில்: நெல்லை நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேர் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

School Holiday

இந்நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது. அதேபோல்  உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: படுபாவிங்க என்னத்த கலந்தாங்கன்னே தெரியலயே! எங்களை அனாதையா விட்டுட்டு போயிட்டியே! கதறும் கள்ளக்குறிச்சி பெண்கள்
 

Government Employee

மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instrument ACT-1881)-இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.  மேலும், இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

School Working Day

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன்29ம் தேதி அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!