தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பது வேறொரு ஆணின் குழந்தைக்கு என்பது அறிந்து குழப்பத்தில் தவிக்கும் ஆணுக்கு நிபுணர் அளிக்கும் பதிலை இங்கு காணலாம்.
தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பது வேறொரு ஆணின் குழந்தைக்கு என்பது அறிந்து குழப்பத்தில் தவிக்கும் ஆணுக்கு நிபுணர் அளிக்கும் பதிலை இங்கு காணலாம்.
"என்னுடைய மனைவி தற்போது 4 மாத கர்ப்பம். ஆனால் அதற்கு நான் காரணம் இல்லை. ஏனென்றால் சமீப காலமாக நாங்கள் நெருக்கமாக இருக்கவே இல்லை. அதனால் எனக்கு நன்றாக தெரியும் அந்த குழந்தை எந்த வழியிலும் என்னுடையதாக இருக்க வாய்ப்பில்லை. யாரோ ஒருவருடைய குழந்தைக்கு நான் எப்படி தந்தையாக இருக்க முடியும் என்பது எனக்கு புரியவில்லை. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து எனக்கு விளக்குங்கள்" என கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: வீட்டில் வெறும் உள்ளாடைளுடன் திரியும் மனைவி.. கொந்தளிக்கும் கணவன்!!
மனநல ஆலோசகரின் பதில்: இந்த கேள்வியை உங்களுக்கு எழுதியதற்கு நன்றி. உங்களுடைய மனைவி கருத்தரித்திருக்கும் குழந்தை உங்களுக்கு பிறந்தது இல்லை என்று நீங்கள் அறிந்திருப்பதை குறித்து உங்களுடைய மனைவியிடம் பேசுங்கள். உங்களுக்கு தோன்றும் உள்ளுணர்வை நம்புங்கள். இதற்கு என்ன முடிவு என்பதை குறித்து பயம் கொள்ளாமல் உங்களுடைய உணர்வுகளை உங்கள் மனைவிக்கு தெரிவியுங்கள். நிச்சயமாக அவர் உங்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்வார். உங்களுடைய முடிவையும் ஆதரிக்க வாய்ப்புள்ளது.
ஒருவேளை உங்களை விட்டு வேறொரு ஆணுடன் இருந்ததற்காக அவர் வருந்தினாலோ, அவளுக்காக அவளுடைய குழந்தைக்கு தந்தையாகும்படி உங்களை கேட்டு கொண்டாலோ உங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். என்ன இருந்தாலும் அவர் உங்களுடைய வாழ்க்கைத் துணை, அவருக்கு இரண்டாவது வாய்ப்பளிப்பது தவறல்ல. உங்கள் ஆதரவிற்கு அவர் தகுதியானவர் தான்.
இதையும் படிங்க: உங்க துணைக்கு இந்த ஒரு விஷயம் தெரியாமல் பார்த்துக்கோங்க!! தெரிஞ்சா உங்க நிலைமை அவ்ளோதான்
மனிதர்கள் தவறு செய்வார்கள் தான். அதை நீங்கள் இப்போது புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மனைவியை ஒருமுறை மன்னிக்க முயற்சிக்க வேண்டும். இந்த ஒருமுறை அவருக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்து பாருங்கள். இதை உங்களால் செய்ய முடிந்தால் உங்கள் குடும்பத்திற்கு வரும் அந்த குட்டி குழந்தையை வரவேற்க தயாராகுங்கள்.
ஆனால் உங்கள் மனைவி உங்களை அடிக்கடி பல்வேறு ஆண்களுக்காக ஏமாற்றியிருந்தால் நீங்கள் அவரை மன்னிக்க வேண்டும் என்றில்லை. அவர் உங்களை ஏமாற்றுவது வாடிக்கையான செயலாக இருந்தால் அவரை விலக்கிவிடுங்கள். அவரை உங்கள் வாழ்வில் அனுமதித்தால் நீங்களும் வருத்தப்படுவீர்கள். சிந்தித்து செயல்படுங்கள். மிகவும் கவனமாக இருங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D