அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் திருமண அழைப்பிதழ் தொடர்பான வீடியோ இணையத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ரிலையன்ஸ் குழும தலைவரும், ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிற்கும் வரும் ஜூலை 12-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதம் அனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குஜராத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த கோலாகல நிகழ்ச்சியில் இந்திய திரைப்பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் மட்டுமின்றி சர்வதேச பிரபலங்களும் கலந்து கொண்டனர். மிகவும் பிரம்மாண்டமாக நடந்த அனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வு பேசு பொருளாக மாறியது.
இதை தொடர்ந்து கடந்த மாத இறுதியில் அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ஜோடியின் 2-வது ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் இத்தாலியில் ஒரு சொகுசு கப்பலில் நடந்தது. 3 நாள் நடந்த இந்த கொண்டாட்டத்தில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
முகேஷ் அம்பானி மருமகள்களை விட பணக்கார பெண்.. சானியா மிர்சாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
இந்த நிலையில் அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் திருமண அழைப்பிதழ் தொடர்பான வீடியோ இணையத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் பல இந்து கடவுள்களின் புகைப்படங்கள் உள்ளன. அந்த வைரல் வீடியோவில் ஒரு கோவில் போன்ற பெட்டி உள்ளதில், அதில் வெள்ளியால் செய்யப்பட்ட சிறிய கோவில் இருந்தது. பெட்டியைத் திறந்தவுடன் பின்னணியில் ஹிந்தி மந்திரங்கள் ஒலித்தன. பெட்டிக்குள் சில தங்க சிலைகளும் இருப்பதாகத் தெரிகிறது.
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் லிஸ்ட்.. முதலிடத்தில் முகேஷ் அம்பானி.. அப்ப அதானி?
திருமண நிகழ்வின் வெவ்வேறு செயல்பாடுகளுக்கான அட்டைகளும் அதில் இருக்கின்றன.. அந்த அட்டையில் விநாயகர், விஷ்ணு, லட்சுமி, ராதா-கிருஷ்ணா மற்றும் துர்கா உள்ளிட்ட பல இந்து தெய்வங்களின் படங்கள் உள்ளன. மூன்றாவது அழைப்பிதழ் பெட்டியும் வெள்ளியால் ஆனது. அதிலும் சில இந்துக் கடவுகள் படங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது.
ஜூலை 12-ம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் ஜூலை 13 ஆம் தேதி சுப் ஆஷிர்வாத் அல்லது தெய்வீக ஆசீர்வாத விழாவும், ஜூலை 14 ஆம் தேதி மங்கள் உத்சவ் அல்லது திருமண வரவேற்பு நிகழ்ச்சியுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனந்த் அம்பானியின் ஆடம்பரமான திருமண அழைப்பிதழ் பெட்டியின் விலை எவ்வளவு என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இது ஒரு சாதாரண திருமண செலவை விட அதிகமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.