Parenting Tips : குழந்தைகள் கீழ்ப்படிய வேண்டுமா..? அப்ப முதல்ல இந்த விஷயங்களை சொல்லிக் கொடுங்கள்..

By Kalai Selvi  |  First Published Jun 27, 2024, 1:28 PM IST

உங்கள் குழந்தை கீழ்ப்படிய வேண்டும் என்றால், அவர்களுக்கு சில விஷயங்களை கற்றுக் கொடுங்கள். அவை..


ஒவ்வொரு பெற்றோரும் தங்களுக்கு குழந்தைகள் கீழ்ப்படிய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், இது எல்லாருக்கும் சாத்தியமில்லை. உங்கள் குழந்தையும் நீங்கள் சொல்லும் பேச்சை கேட்காமல் அடம்பிடிக்கிறார்களா? அவர்களை கீழ்ப்படிய செய்வதற்கு நீங்கள் அவர்களுக்கு சில விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அது என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நல்ல பழக்க வழக்கங்கள்: உங்கள் குழந்தை நீங்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்றால், முதலில் அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுங்கள். ஏனெனில், இவை தான் அவர்கள் பிறரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மரியாதை கொடுக்க வேண்டும், பொறுப்பாக இருப்பது, சுய கட்டுப்பாடு, நேர்மை பிறருக்கு உதவுவது போன்ற விஷயங்களை சொல்லிக் கொடுக்கும்.

Tap to resize

Latest Videos

முழு கவனம்: உங்கள் குழந்தைக்கு பிறர் பேசும்போது அவர்கள் பேசுவதை முழு கவனத்துடன் கவனிக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்ளுங்கள். ஏனெனில், நல்ல கவனிக்கும் திறன் மரியாதை மற்றும் தெளிவாக தொடர்பு கொள்வதை வளர்க்கும்.

இதையும் படிங்க:  Parenting Tips : குழந்தைகளை மகிழ்ச்சியாக வைக்க இந்த 3 விஷயங்களை மட்டும் செய்தால் போதும்!

அதிகாரத்திற்கு மதிப்பு: பெற்றோர் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களை மதிக்க வேண்டும் என்று உங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே கற்றுக் கொடுங்கள். காரணம், அதிகாரத்தின் பங்கு என்ன என்பதை அவர்கள் வாழ்வில் அங்கீகரிப்பது, வழிகாட்டியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வது மற்றும் விதிகளை மதிப்பது போன்ற அனைத்தையும் கற்பார்கள்.

தினசரி பழக்கவழக்கங்கள்: உங்கள் குழந்தைகள் தினசரி பழக்க வழக்கங்கள் மற்றும் அட்டவணைகளை பின்பற்ற வேண்டும் என்று  ஊக்குவிக்கவும். அதில், சாப்பிடும் நேரம், பாடங்களை படித்து முடிப்பது, படுக்கைக்கு செல்வது போன்ற அனைத்தையும் குறித்து வைக்க சொல்லுங்கள். இவை அவர்களுக்கு பொறுப்புணர்வு மற்றும் ஒழுக்கத்தை வளர்க்க பெரிதும் உதவும்.

கண்ணியம்: குழந்தை பருவத்தில் இருந்து பிறருக்கு நன்றி சொல்வது , மன்னிப்பு கேட்பது என போன்ற பல வார்த்தைகளை கற்றுக் கொடுங்கள். இதன் மூலம் அவர்கள் நல்ல முறையில் வளர்வார்கள்.

இதையும் படிங்க:  Parenting Tips : உங்கள் குழந்தை நல்ல முறையில் வளர பெற்றோர்கள் செய்ய வேண்டிய முதல் 5 விஷயங்கள்!

பிறருக்கு உதவுவது: பிறருக்கு உதவ வேண்டும் என்று உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். ஏனெனில், எல்லோரிடமும் அன்பாக நடந்து கொண்டால் அவர்கள் பிறர் எதிர்பார்க்காமலே உதவி செய்வார்கள்.

பொறுப்பேற்றுக்கொள்வது: கீழ்ப்படியும் குழந்தைகள் பொறுப்புகளை  தானாக செய்து முடிப்பார்கள். இதில் ஏதேனும் தவறுகள் வந்தால் கூட அவர்கள் அதை புரிந்து கொள்ளவும், அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்ளவும் உதவுகிறது.

சுய கட்டுப்பாடு: கீழ்ப்படியும் குழந்தைகள் தங்களது உணர்வுகள் மற்றும் தூண்டுதல்களை கையாள கற்றுக் கொள்வார்கள். முக்கியமாக இது பொறுமையை கற்றுக் கொள்ளவும், முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவும் போன்ற நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்வார்கள்.

எல்லைகளை மதிப்பது: கீழ்ப்படியும் குழந்தைகள் அடுத்தவர்களின் எல்லைகளை மதிக்க கற்றுக் கொள்வார்கள். அதுமட்டுமின்றி, தனிப்பட்ட இடத்தை புரிந்து கொள்ளவும், மற்றவர்களின் தனித்தன்மைக்கு மதிப்பு கொடுக்கவும் கற்றுக் கொள்வார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!