Latest Videos

தினமும் காலை சோர்வாக உணர்கிறீர்களா..? புத்துணர்ச்சியுடன் நாளை தொடங்க சூப்பரான டிப்ஸ்..!

By Kalai SelviFirst Published Jun 26, 2024, 8:00 AM IST
Highlights

பெரும்பாலும் காலையில் எழுந்தவுடன் நீங்கள் சோர்வாக உணருகிறீர்கள் என்றால், உங்கள் வழக்கத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

நீங்கள் இரவு நன்றாக தூங்கிய பிறகும் காலையில் எழும்போது சோம்பலோடு சேர்ந்து சோர்வாகவும் உணர்கிறீர்களா..? அதுவும் நீங்கள் அடிக்கடி இப்படி உணர்கிறீர்களா..? 
இதுமாதிரி உணர்ந்தால் உங்கள் உடலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் நீங்கள் நோய்வாய்ப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, காலையில் புத்துணர்ச்சியுடன் இருக்க இந்தப் பதிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும். நாள் முழுவதும் உற்சாகமாகவுன், புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். அவை..

இதையும் படிங்க:  உடல் எடையை கஷ்டப்படாமல் குறைக்கணுமா..? அப்ப தினமும் இந்த 4 விஷயங்களை மட்டும் செய்ங்க..

காலையில் புத்துணர்ச்சியுடன் இருக்க சில குறிப்புகள்:

  • பெரும்பாலானோர், காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பது வழக்கம். இந்த பழக்கம் உங்களிடம் இருந்தால் அது உடனே நிறுத்துங்கள். ஏனெனில், இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
  • அதுபோல காலையில் எழுந்த பிறகு உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். உங்கள் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
  • நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க அதிகாலையில் எழுதுவது மிகவும் அவசியம். எனவே, காலையில் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். அது உங்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும்.
  • காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் வயிறு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • காலையில் வெறும் வயிற்றில் பப்பாளியை சாப்பிடலாம். ஏனெனில், இது சுத்திகரிப்பு பண்புகளைக் கொண்டுள்ளது இதனால் செரிமான மேம்படும். கூடுதலாக, இது சருமத்திற்கும் நன்மை பயக்கும்.

இதையும் படிங்க:  ஆயுசு முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..? அப்ப தினமும் காலையில் வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடுங்கள்!

  • காலையில் டேட்ஸ்களை சாப்பிடுவதன் மூலம் உங்கள் நாளை தொடங்கலாம். இது ஒரு உட்பட்ட ஆற்றலை வழங்குகிறது மற்றும் பல ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது.
  • நிபுணர்களின் கூற்றுப்பாடி, காலையில் லேசான உணவுடன் நாளை தொடங்குங்கள். இரவு ஊற வைத்த பாதாமை காலையில் சாப்பிடுங்கள் இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
  • அதுபோல காலை சோர்வை போக்க என்னைக் கொண்டு உடலை மசாஜ் செய்யுங்கள். இது உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
  • முக்கியமாக இரவு தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் மொபைல் மற்றும் லேப்டாப் பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. இவை காலையில் தூங்கி எழும் போது, 
  • சோர்வை அதிகரிக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!