- Home
- Gallery
- முகேஷ் அம்பானி மருமகள்களை விட பணக்கார பெண்.. சானியா மிர்சாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
முகேஷ் அம்பானி மருமகள்களை விட பணக்கார பெண்.. சானியா மிர்சாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
முகேஷ் அம்பானியின் இரு மருமகள்களை விட அதிக பணக்கார பெண்ணாக இருக்கும் சானியா மிர்சாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

முகேஷ் அம்பானி குடும்பம் உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக உள்ளது. சமீபத்தில் நடந்த அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்வு பேசு பொருளாக மாறியது.
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மருமகள் ஷ்லோகா மேத்தா மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இருவரும் அம்பானியின் சொத்துகளை அனுபவிக்கலாம். அம்பானியின் இரு மருமகள்களை விட அதிக பணக்கார ஒரு பெண் இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை.. பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தான்.
Sania Mirza
சானியா மிர்சா முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை ஆவார். அவர் விளையாட்டு துறையில் உச்சத்தில் இருந்த போது, இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் மற்றும் செல்வாக்கு மிக்க விளையாட்டு வீரராக இருந்தார்.
Sania Mirza Networth
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குடன் விவாகரத்து பெற்றதற்காக சானியா மிர்சா தற்போது மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். சானியா மிர்சா தனது இசானுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும் தனது வெற்றிகரமான வாழ்க்கை மற்றும் சிறந்த ஆட்டத்தால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி உள்ளார்.
Sania Mirza
சானியா மிர்சாவைப் பற்றிய ஒரு ஆச்சரியமான உண்மை என்னவென்றால், அவரின் சொத்து மதிப்பு ஷ்லோகா மேத்தா மற்றும் ராதிகா மெர்சண்ட் ஆகியோரின் சொத்து மதிப்பை விட அதிகம்.
Sania Mirza
சானியா மிர்சாவின் நிகர மதிப்பு 26 மில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 216 கோடி ஆகும். அவர் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் ரூ. 25 கோடி சம்பளம் வாங்குகிறாராம். தனது சொந்த டென்னிஸ் அகாடமியையும் நடத்தி வருகிறார்.
Sania Mirza
சானியா மிர்சா மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கிறார். ஹைதராபாத்தில் உள்ள அவரது ஆடம்பரமான வீடு சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புடையது. மேலும் பல சொகுசு கார்களையும் அவர் வைத்திருக்கிறார். சானியா மிர்சாவிடம் BMW 7-சீரிஸ் கார் உள்ளது, அதன் மதிப்பு ரூ.1.70 கோடி. இது தவிர, அவரிடம் ரூ.72.09 லட்சம் மதிப்புள்ள Range Rover Evoque, மற்றும் ரூ.46.64 லட்சம் மதிப்புள்ள Jaguar XE கார் உள்ளது.
Shloka Radhika
அம்பானி மருமகளின் சொத்து நிகர மதிப்பைப் பொறுத்தவரை, ஆகாஷ் அம்பானியின் மனைவி ஷ்லோகா மேத்தாவின் சொத்து மதிப்பு $18 மில்லியன் அல்லது ரூ.120 கோடி. மறுபுறம், அனந்த் அம்பானியின் வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட்டின் சொத்து மதிப்பு தற்போது சுமார் 10 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.