Latest Videos

VJ Anjana dance: அந்த க்யூட் ஏஞ்சலா இப்படி; சட்டையைக் கழற்றி வேற லெவல் சேஞ்ஜ் காட்டும் அஞ்சனா!!

By SG BalanFirst Published Jun 26, 2024, 9:27 PM IST
Highlights

அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். தான் அணிந்திருக்கும் சட்டை பட்டனை கழற்றி விட்ட நிலையில், செம குத்தாட்டம் போட்டு அசத்தி இருக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் புகழ்பெற்ற தொகுப்பாளினிகளில் ஒருவர் அஞ்சனா. க்யூட்டான லுக்கில் அனைவரையும் கவர்ந்த அவர், டிடி, பாவனா, ரம்யா, அர்ச்சனா எனப் பிரபல தொகுப்பாளினிகளின் வரிசையில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்தார்.

அஞ்சனா ஆர்மி என்று இவருக்காக ஒரு ரசிகர் கூட்டமே உருவாகி இருக்கிறது. அவர்கள் தினமும் அஞ்சனாவின் க்யூட்டான படங்களை பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள். சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது பயணத்தை தொடங்கிய இவர் புதுயுகம், ஜீ தமிழ் போன்ற சேனல்களிலும் பணியாற்றி இருக்கிறார்.

சன் மியூசிக்கில் வேலை பார்த்தபோதே கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா, அவ்வப்போது மகனுடனும் கணவர் சந்திரனுடனும் அழகான போட்டோக்களை எடுத்து பகிர்ந்து வருகிறார். 

மெகாஸ்டார் சிரஞ்சீவி அரசியல் ரீ-என்ட்ரி...? பவன் கல்யானின் ஜனசேனாவில் முக்கிய பதவிக்கு ரெடியா?

இந்நிலையில் அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். தான் அணிந்திருக்கும் சட்டை பட்டனை கழற்றி விட்ட நிலையில், செம குத்தாட்டம் போட்டு அசத்தி இருக்கிறார். நம்ம அஞ்சனாவா இப்படி... என்று அவரது ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து லைக் போடுகிறார்கள்.

"மண்டைக்குள்ள ஓடிட்டே இருந்துது இந்தப் பாட்டு. ஏதோ என்னலா முடிஞ்சத நான் பாட்டுக்கு ஆடி வெச்சிருக்கேன்" என்றும் அஞ்சனா கூறியிருக்கிறார்.

அஞ்சனாவின் அழகையும் ஆட்டத்தையும் பார்த்து குஷியான ரசிகர்கள் கமெண்ட்டில் மெய்சிலிர்க்க பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அது மட்டுமின்றி, வீடியோ அதிகமாகப் பரப்பி வைரல் ஆக்கும் வேலையிலும் குதித்திருக்கிறார்கள் அஞ்சனா ஆர்மி மெம்பர்கள்.

சித்தார்த்தை வைத்து ரஜினியை பங்கமா கலாய்த்த இந்தியன் 2! கமல் கூட நோட் பண்ணலயா!

click me!