Ninaithen Vandhai: மனோகரிக்கு காத்திருந்த அதிர்ச்சி! சுடர் செய்த சம்பவம் - நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்!

By manimegalai a  |  First Published Jun 20, 2024, 4:28 PM IST

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் தனது கழுத்தில் விழுந்த தாலியை கழட்ட போக அய்யர் தடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 
 


அதாவது, அய்யர் இந்த தாலியை கழட்டாத, இதை கழட்டினா சம்மந்தப்பட்டவங்களுக்கு ஏதாவது ஆபத்து வரும் என்று சொல்கிறாள். அப்போது இதை எப்போ கழட்டனும் என்று சுடர் கேட்க அய்யர் பௌர்ணமி நாளில் இதை கழட்டு என்று சொல்லி செல்கிறார். 

இதையடுத்து மனோகரின் அப்பா அவளை பார்க்க வந்து உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக சொல்ல மனோகரி எனக்கு இந்த மாப்பிள்ளையும் வேண்டாம், இந்த கல்யாணமும் வேண்டாம் என்று சொல்ல சுடர் மாப்பிளையை பார்த்து பேசுங்க அப்புறம் முடிவு பண்ணுங்க என்று சொல்கிறாள். 

Latest Videos

பிறகு மனோகரி சுடரை தனியாக சந்தித்து என்ன ஏத்தி விடுறியா என்று கோபப்படுகிறாள். சுடர் உன்னால் முடிந்ததை பார்த்துக்கோ என்று சொல்ல மனோகரி நான் யாருனு காட்டுறேன் என்று சவால் விடுகிறாள். இதை தொடர்ந்து மனோகரியும் செல்வியும் பேசி கொண்டிருக்க அப்போது அஞ்சலி அங்கு வர மனோகரி பேசுனதையெல்லாம் கேட்டு இருப்பாளோ என்று பதறி போகிறாள். 

இப்படி தான் பேசுறதை ஒட்டு கேப்பியா? அந்த சுடர் இது தான் உனக்கு சொல்லி தராளா? என்று கோபப்பட்டு திட்ட மற்ற குழந்தைகளும் வந்து விட பாட்டியிடம் மனோகரி திட்டிய விஷயத்தை சொல்ல முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

click me!