Latest Videos

Saregamapa : மகளின் காலில் விழுந்த தந்தை... தேம்பி தேம்பி அழுத நடுவர்கள் - சரிகமப நிகழ்ச்சியில் நடந்தது என்ன?

By Ganesh AFirst Published Jun 20, 2024, 12:27 PM IST
Highlights

சரிகமப நிகழ்ச்சியில் நடுவர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது, அதுபற்றி புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. 23 போட்டியாளர்களுடன் தொடங்கி விறுவிறுவிப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக், சைந்தவி ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். 

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ரவுண்டுடன் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் வரும் வாரத்தில் டெடிகேஷன் ரவுண்ட் நடைபெற உள்ளது. அதாவது போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலை தேர்வு செய்து யாருக்காவது ஒருவருக்கு டெடிகேட் செய்து பாட உள்ளனர். 

இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஒரு ப்ரோமோ வீடியோவில் சரத் சார்ஸ் அம்மா என்றழைக்காத உறவு இல்லையே என்ற பாடலை பாடி கொண்டிருக்கும் போது நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து வரும் அவரது அம்மா சிலரின் உதவியோடு மெல்ல மெல்ல நடந்து வர அதை பார்த்து சரத் பாட்டை நிறுத்தி கண் கலங்குகிறார். 

இதையும் படியுங்கள்... கள்ளக்குறிச்சி விவகாரம் : திமுக-வை தில்லாக எதிர்த்த விஜய்... கப்சிப்னு ஆன சூர்யாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

பிறகு அவரது அம்மா என்னை கவனித்து கவனித்து அவங்க வாழ்க்கை வேஸ்ட்டா போகுதுனு கவலையா இருக்குனு கண் கலங்க, நடுவர்களும் இதை பார்த்து கண் கலங்குகின்றனர். இறுதியாக சரத் அம்மாவை உட்கார வைத்து அவரது பக்கத்தில் நின்று பாடி அசத்தி கோல்டன் ஷவரை பெறுகிறார். 

அதே போல் இன்னொரு ப்ரோமோ வீடியோவில் ஸ்வேதா ஒரு பாடலை பாடி முடித்த பிறகு தனது அப்பாவுக்காக எழுதிய முதல் லெட்டரை கொடுக்க, அதை அவரது அப்பா படிக்க தொடங்குகிறார், எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.. ஆனால் எனக்கு உங்களை பிடிக்குமான்னு தெரியல என்று எழுதி இருக்க, பிடிக்கும் ஆனால் இதுவரைக்கும் காட்டினது இல்ல என்று அழ தொடங்கி விடுகிறார் அவரது தந்தை. 

மேலும் அந்த லெட்டரில் எனக்கு ரொம்ப நாள் ஏக்கம் ஒரு முறையாவது என்ன கட்டி பிடித்து ஒரே ஒரு முத்தம் கொடுங்க என்று எழுதி இருக்க, அவரது அப்பா யாரும் எதிர்பாராத விதமாக ஸ்வேதாவின் காலில் விழுந்து விட, மொத்த மேடையும் கண்ணீர் மயமாகிறது. அர்ச்சனா இந்த உலகத்திலேயே பெரிய பாராட்டு அப்பாக்களிடம் இருந்து வருவது தான் அதை புரிந்துக்கோங்க என்று கண்ணீருடன் பேசுகிறார். இப்படி பல எமோஷனலான தருணங்களுடன் வரும் வாரத்தின் டெடிகேஷன் ரவுண்ட் நடைபெற இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே சரிகமப நிகழ்ச்சியை மிஸ் பண்ணாம பாருங்க.

இது தந்தையின் தாலாட்டு...!!!❤
Saregamapa Senior Season 4 | Dedication Round | Saturday and Sunday at 7pm pic.twitter.com/FHXXOdUdtn

— Zee Tamil (@ZeeTamil)

இதையும் படியுங்கள்... Premgi : எவ்வளவோ பண்ணிட்டோம்... இத பண்ணமாட்டோமா! காதல் மனைவிக்காக சமையல் மாஸ்டராக மாறிய பிரேம்ஜி

click me!