“வீட்ல ஃபேன் இல்லன்னு சொன்ன.. நியூயார்க் எப்படி போன..” பிக்பாஸ் மாயாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..

By Asianet Tamil  |  First Published Jun 19, 2024, 7:17 PM IST

நியூயார்க் நகரின் தெருக்களில் கூலாக நடந்து செல்லும் வீடியோக்களை பிக்பாஸ் மாயா பதிவிட்டுள்ளார்.


விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டவர் மாயா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான பூர்ணிமா உடன் சேர்ந்து  கொண்டு ஒரு கேங்காக கேமை விளையாடி வந்தார் மாயா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மாயாவின் செயல்களை பார்வையாளர்களுக்கு எரிச்சையே ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. 
குறிப்பாக பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதற்கு மாயா மற்றும் அவரின் கேங் தான் காரணம் என்றும் விமர்சிக்கப்பட்டது. 

மேலும் வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த அர்ச்சனாவை மாயா மற்றும் அவரின் கும்பல் நடத்திய விதம் பிக்பாஸ் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் மாயா பூர்ணிமா கேங்கை புல்லி கேங் என்றே பலரும் அழைத்தனர்.. 

Latest Videos

இதனால் பிரதீப் ஆண்டனியின் ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் மாயாவை திட்டி தீர்த்தனர். அவரின் பேச்சுகள், செயல்கள் அனைத்தும் விமர்சனத்திற்கு உள்ளானது. வார இறுதி எபிசோடில் கமல்ஹாசனும் மாயா, பூர்ணிமாவை கண்டித்து வந்தார்.

ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய ரன்வீர் சிங்.. தீபிகாவை முந்திய ஆலியா.. பிரபலங்களின் பிராண்ட் மதிப்பு இவ்வளவா?

இப்படி பிக்பாஸ் மூலம் நெகட்டிவ் இமேஜை பெற்று வந்த மாயா, ஃபைனல்ஸ் வரை சென்றார். இந்த நிகழ்ச்சியில் 3-வது இடத்தை பிடித்தார். நல்லவேளை மாயா டைட்டில் வின்னராக வில்லை என்று பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் பல போட்டியாளர்கள் யூ டியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்த நிலையில், மாயா, பூர்ணிமா மற்றும் அவரின் கேங்கை சேர்ந்த யாரும் பேட்டியளிக்கவில்லை. 

இந்த நிலையில் மாயா அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதுதொடர்பான போட்டோக்களை அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நியூயார்க் நகரின் தெருக்களில் கூலாக நடந்து செல்லும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

 

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மாயாவை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். குறிப்பாக பயனர் ஒருவர் “ வீட்ல ஃபேன் இல்லன்னு சொன்ன.. இப்ப நியூயார்க்கில் ஹாயா சுத்திட்டு இருக்க.. அப்புறம் கைவசம் 5-6 படம் இருக்குன்னு சொன்ன.. ஒன்னும் ரிலீஸ் ஆகுற மாதிரி தெரியலயே” என்று பதிவிட்டுள்ளார். 

21 வயதில் ஹீரோ.. பின்னர் நடந்த துரதிர்ஷ்ட சம்பவம்.. ஆனா இன்று ரூ.3300 கோடி நிறுவனத்திற்கு அதிபதி..

மேலும் பலரும் மாயவை பார்த்தேல் எரிச்சல் ஆகுது என்பது போன்ற கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர். புல்லி கேங் லீடர் எனவும், பைத்தியமே பொறாமைப்படும் பைத்தியம் நீ என்றும் பதிவிட்டுள்ளனர்.                                                                                                         

click me!