Latest Videos

Coolie Lokesh Kanagaraj movie: கூல பட அப்டேட் கொடுத்த லோகேஷ்; ரஜினி கெட்டப்பை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

By Raghupati RFirst Published Jun 26, 2024, 8:12 PM IST
Highlights

38 ஆண்டுகளுக்கு பிறகு சத்யராஜ் - ரஜினிகாந்த் இணைந்து திரையில் வரும் படம் கூலி. தற்போது லோகேஷ் கனகராஜ் கூலி படத்தில் வரும் ரஜினியின் கெட்டப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜய் உடன் கைகோர்த்து வெற்றி பெற்ற லியோ படத்திற்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் கூலி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணையும் முதல் படம் இதுவாகும். வேட்டையனுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படம் குறித்து ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த படத்தில், ரஜினிகாந்த் முன்புறம் உள்ள கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருப்பதை, லோகேஷ் தனது மொபைல் கேமராவில் பின்னால் இருந்து படம் பிடித்துள்ளார். ரஜினி - லோகேஷ் கனகராஜ் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்து, கூலி படத்தின் லுக் டெஸ்ட் என்றும், ஜூலை முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த படத்தில், ரஜினிகாந்த் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் காணலாம். கூலிங் கிளாஸை வைத்துள்ளார். ரஜினியின் சிகை அலங்காரம் வித்தியாசமாக உள்ளது. ரஜினியின் இந்த கெட்டப் குறித்து பல்வேறு கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். 

Look test for 🔥
On floors from July pic.twitter.com/ENcvEx2BDj

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh)

காலா படத்தில் வரும் ரஜினியை போலவே, கூலி படத்தின் டெஸ்ட் லுக் இருக்கிறது என்று பதிவிட்டு உள்ளார்கள். அதே போல நேற்று இந்தியன் 2 ட்ரைலர் வெளியானது. விஜய் பட அப்டேட் வரும் போது, அஜித் எப்படி அவருடைய புகைப்படத்தையோ, அல்லது வீடியோவையோ வெளியிட்டு ட்ரெண்டிங்கை மாற்றுவரோ, அதனை போல கமலுக்கு ரஜினி பதிலடி கொடுத்துள்ளார் தலைவர் ரஜினி என்றும் அவரது ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

நேற்று கமல் ஹாசன் நடிப்பில், ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது என்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.  38 ஆண்டுகளுக்கு பிறகு சத்யராஜ் - ரஜினிகாந்த் இணைந்து திரையில் வரும் படம் கூலி என்பது கூடுதல் சிறப்பு. ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் கடைசியாக 1986 ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் பாரத் படத்தில் இணைந்து பணியாற்றினர்.

ராஜமௌலி இல்லை.. ஷங்கர் இல்லை.. இந்தியாவின் பணக்கார திரைப்பட இயக்குனர் இவர்தான்.. யாரு தெரியுமா?

click me!