
சில நாட்களுக்கு முன் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது பிறந்தநாளைக் கொண்டாட்டினார். அந்தக் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித் கலந்துகொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
நடராஜனும் அஜித்தும் சந்தித்துக்கொண்டது பற்றி நடராஜன் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டிருக்கிறார். இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டி முடிந்தவுடன் இதைப்பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
தற்போது நடக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் கமெண்ட்ரி செய்ய தமிழக வீரர் நடராஜன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.
கண் பாதுகாப்புக்கு கேரண்டி கொடுக்கும் தரமான ஸ்மார்ட்போன்! எப்படி இருக்கு Moto S50 Neo?
அபோபது, தனது பிறந்தநாளில் நடிகர் அஜித்தை சந்தித்தது பற்றி நினைவுகூர்ந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிசியோதெரபிஸ்ட் அஜித்துக்கும் பயிற்சி அளித்து வருவதால், ஹைதராபாத் அணியினருடன் இரவு உணவுகளை சாப்பிடப் போனபோது அஜித்தை சந்தித்து சர்ப்ரைஸ் ஆனதாகச் சொல்கிறார் நடராஜன்.
"அன்று எனக்கு பிறந்தநாள் என்று சொன்னதும், உடனே கேக் வெட்டி கொண்டாட்டம் நடந்தது. அஜித்தை முதல் முறையாக நேரில் சந்தித்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அஜித் ரொம்ப எளிமையாக இருந்தார். அதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், நாங்கள் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது என்னுடைய கார் உட்பட அனைவரின் கார் கதவையும் திறந்து வழியனுப்பி வைத்தார். அதை என்னால் மறக்கவே முடியாது" என்று நடராஜன் தெரிவித்துள்ளார்.
அஜித் பற்றி நடராஜன் நெகிழ்ச்சியுடன் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் அவரது எளிமையையும் அனைவரிடமும் மரியாதையாக நடந்துகொள்ளும் பண்பையும் போற்றிப் புகழ்ந்து வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: பலி எண்ணிக்கை 63ஆக உயர்வு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.