Ajith : தலைக்கு தில்ல பாத்தியா... BMW காரில் 220 கி.மீ வேகத்தில் சிட்டாக பறந்த அஜித் - வைரலாகும் வீடியோ

Published : Jun 26, 2024, 01:44 PM ISTUpdated : Jun 26, 2024, 01:57 PM IST
Ajith : தலைக்கு தில்ல பாத்தியா... BMW காரில் 220 கி.மீ வேகத்தில் சிட்டாக பறந்த அஜித் - வைரலாகும் வீடியோ

சுருக்கம்

நடிகர் அஜித்குமார் துபாயில் உள்ள கார் ரேஸ் டிராக்கிற்கு விசிட் அடித்தபோது அங்கு பிஎம்டபிள்யூ காரை 220 கிமீ வேகத்தில் ஓட்டிப்பார்த்த வீடியோ வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித். அவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் ஆரவ், ரெஜினா, அர்ஜுன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதற்காக அண்மையில் அஜர்பைஜான் செல்லும் முன் துபாய்க்கு சென்றிருந்தார் அஜித். அங்குள்ள கார் ரேஸ் டிராக்கிற்கு விசிட் அடித்த அஜித், அங்கிருந்த பிஎம்டபிள்யூ காரை ரேஸ் டிராக்கில் ஓட்டிப் பார்த்தார். அதுவும் நார்மல் ஸ்பீடில் அல்ல, அசுர வேகத்தில் ஓட்டிப்பார்த்து இருக்கிறார் அஜித். சுமார் 222 கிலோ மீட்டர் வேகத்தில் அஜித் அந்த காரை ஓட்டிச் சென்றபோது எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... பாட்டி ஆன பின்னும் பியூட்டி குறையல... நதியா போல் வயதாக வயதாக அழகில் மெருகேறிக்கொண்டே போகும் கவிதா விஜயகுமார்

நடிகர் அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா அந்த வீடியோவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில் AK The Speed Merchant என குறிப்பிட்டு அந்த வீடியோ கடந்த ஜூன் 21ந் தேதி எடுக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். நடிகர் அஜித் கார் ரேஸ் ஓட்டியவர் என்பது பலரும் அறிந்ததே. இருப்பினும் ஒரு முறை கார் ரேஸ் ஓட்டியபோது விபத்தில் சிக்கியதால் தான் அதன்பக்கம் தலைகாட்டாமலேயே இருந்து வந்தார் ஏகே.

இந்நிலையில், தற்போது துபாயில் அஜித் மீண்டும் ரேஸ் டிராக்கில் களமிறங்கி உள்ளதை பார்த்த நெட்டிசன்கள், அஜித் மீண்டும் கார் ரேஸில் கலந்துகொள்ள உள்ளாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது விடாமுயற்சி படத்தில் பிசியாக நடித்து வரும் அஜித், அப்படத்தை முடித்ததும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார். இதனிடையே அஜித்தின் கார் ரேஸ் வீடியோக்கள் நிறைய வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பாட்டி ஆன பின்னும் பியூட்டி குறையல... நதியா போல் வயதாக வயதாக அழகில் மெருகேறிக்கொண்டே போகும் கவிதா விஜயகுமார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!