Latest Videos

Aditi Shankar : மாஸ்டர் பட வில்லனுடன் ரொமான்ஸ் செய்ய ரெடியான அதிதி ஷங்கர்... கோலிவுட்டை கலக்க வரும் புது ஜோடி

By Ganesh AFirst Published Jun 26, 2024, 9:06 AM IST
Highlights

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், அடுத்ததாக நடிக்க உள்ள புதுப்படத்தில் மாஸ்டர் பட வில்லனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தற்போது தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதிதி. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் கிராமத்து நாயகியாக கலக்கிய அதிதிக்கு முதல் படமே பிரம்மாண்ட வெற்றிப்படமாக அமைந்தது.

விருமன் படத்தின் வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் அதிதி. இவர்கள் காம்போவில் மாவீரன் திரைப்படம் உருவானது. இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கி இருந்தார். கடந்த ஆண்டு திரைக்கு வந்த மாவீரன் திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பட்டைய கிளப்பியது. இப்படி தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்த அதிதி ஷங்கருக்கு தற்போது கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... அனிதா விஜயகுமார் திருமணத்தில் முறை மாமனாக சீர்செய்த சத்யராஜ்! கணவரோடு வந்த ஸ்ரீதேவி! வெட்டிங் போட்டோஸ்!

அந்த வகையில் அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய திரைப்படத்தை விஷ்ணு வர்தன் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஹீரோவாக நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் நடிக்கிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே மேலும் ஒரு பட வாய்ப்பை தட்டி தூக்கி இருக்கிறார் நடிகை அதிதி ஷங்கர். அதன்படி அவர் ஹீரோயினாக நடிக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் மணிகண்டன் நடித்த குட்நைட், லவ்வர் போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் தான் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி உள்ளாராம் அதிதி ஷங்கர். இப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக அதிதி நடிக்க உள்ளாராம். மாஸ்டர், கைதி போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், சமீபகாலமாக ஹீரோவாக கலக்கி வரும் நிலையில், அவர் அதிதி ஷங்கருடன் ஜோடி சேரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

இதையும் படியுங்கள்... திடீரென சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட சன் டிவி... சட்டென புது பிசினஸ் தொடங்கிய எதிர்நீச்சல் சீரியல் நாயகி

click me!