5 ஆண்டுகளாக ஷாருக் கான் திரைப்படங்களில் நடிக்காதது ஏன்? விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு!!

First Published Jan 11, 2023, 8:13 PM IST

2018 ஆம் ஆண்டு ஜீரோ திரைப்படத்தில் நடித்த ஷாருக் கான், அதற்கு பிறகு ஐந்தாண்டுகளாக அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த ஐந்தாண்டுகளில் அவர் எங்கே சென்றார், ஏன் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். 

பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த ஜீரோ திரைப்படம்:

2018 ஆம் ஆண்டில், இயக்குனர் ஆனந்த் எல் ராயுடன் இணைந்து ஷாருக்கான் ஜீரோ படத்தைத் தயாரித்தார். வித்தியாசமான கான்செப்ட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை ஷாருக்கின் மனைவி கவுரி கான் தயாரித்துள்ளார். இப்படத்தில் அனுஷ்கா சர்மா மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தபோதிலும், படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.

குள்ள மனிதராக நடித்த ஷாருக்கான்:

ஜீரோ படத்தில் ஷாருக்கான் குள்ள மனிதராக நடித்திருந்தார். அறிக்கைகளின்படி, இந்த படம் சுமார் 6 ஆண்டுகள் வேலை செய்யப்பட்டது மற்றும் ஷாருக்கின் மீது அதிக நம்பிக்கை இருந்தது, ஆனால் படம் தோல்வியடைந்தது.

திரைப்படங்களில் நடிக்க ஷாருக் மறுப்பு:

ஜீரோ படத்தின் தோல்விக்குப் பிறகு ஷாருக் மிகவும் ஏமாற்றமடைந்ததாகவும் அதனால் தான் அவர் எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகவில்லை என்றும் பி-டவுனில் வதந்திகள் பரவின. விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மாவை வைத்து எடுக்கப்படும் சாரே ஜஹான் சே அச்சா தக் படத்தில் கூட அவர் நடிக்க மறுத்துவிட்டார்.

படம் பண்ண எனக்கு தோணவில்லை: ஷாருக்

ஜீரோ படத்தின் தோல்விக்குப் பிறகு ஷாருக் கான் சுமார் 6 மாதங்கள் வெளிச்சத்தில் இருந்து விலகி இருந்தார், பின்னர் முன் வந்து ஒரு பேட்டியில், நான் தற்போது எந்த படத்திலும் வேலை செய்யவில்லை. ஒரு படம் முடிஞ்சதும் இன்னொரு படம் பண்ண ஆரம்பிப்பேன். அப்படியே நான் மீண்டும் பிஸியாகிவிடுவேன். ஆனால் ஜீரோவுக்குப் பிறகு எந்தப் படத்தையும் செய்ய வேண்டும் என்று என் மனதில் தோன்றவில்லை என்று தெரிவித்தார். 

குடும்பத்துடன் நாட்களை கழித்த ஷாருக்:

ஜீரோவுக்குப் பிறகு, ஷாருக் தனது குடும்பத்துடன் சில மாதங்கள் கழித்தார். அப்போது அவர் திரைப்படங்களைப் பார்த்தார், திரைப்படக் கதைகளைக் கேட்டார், மேலும் பல புத்தகங்களைப் படித்தார். சுமார் 1-2 வருடங்கள் இப்படியே கழித்த ஷாருக், 2019 ஆம் ஆண்டில், சோனம் கபூரின் தி ஜோயா ஃபேக்டர் திரைப்படத்தில் கதை சொல்லும் பணியை செய்தார்.

பொதுமுடக்கத்தால் ஸ்தம்பித்த திரையுலகம்:

2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுநோய் காரணமாக, நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இதனால் பாலிவுட் துறையும் ஸ்தம்பித்தது. அந்த காலக்கட்டத்தில் ஷாருக்கான் மட்டுமின்றி திரையுலகின் வேறு எந்த நட்சத்திரமும் படப்பிடிப்பை நடத்தவில்லை. அதுமட்டுமின்றி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த படங்களும் நிறுத்தப்பட்டன.

கேமியோ ரோல்களில் நடித்த ஷாருக்:

பின்னர் கரண் ஜோஹரின் தயாரிப்பில் உருவான பிரம்மாஸ்திரா திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு கேமியோ ரோலில் நடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு, அதை ஷாருக் ஏற்றுக்கொண்டார். அப்போது, ராக்கெட்ரி மற்றும் லால் சிங் சதா ஆகிய படங்களிலும் அவருக்கு கேமியோ ரோல்கள் வழங்கப்பட்டது. இந்த மூன்று படங்களும் 2022ல் வெளியானது.

2 ஆண்டுகளுக்கு பின் படம் நடித்த ஷாருக்:

ஜீரோ திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு 2020இல், பதான் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஷாருக், யாஷ் ராஜின் படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் இந்த படத்திற்காக தனது உடலமைப்பை மாற்றத் தொடங்கினார்.

இணையத்தில் வைரலான ஷாருக் புகைப்படங்கள்:

செப்டம்பர் 2020இல், ஷாருக்கான் பதான் படத்திற்காக நடித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 2020இல் மும்பையில் தொடங்கியது. அப்போது, முடி மற்றும் தாடியுடன் இருக்கும் ஷாருக்கின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இருப்பினும், அவர் தனது தோற்றத்தை மறைத்துக்கொண்டார்.

திரையரங்குகளில் வெளியாக உள்ள ஷாருக்கின் பதான் திரைப்படம்:

பதான் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 2022-ல் நிறைவடைந்தது. படத்தின் டீசர் ஷாருக்கின் பிறந்த நாளான நவ.2 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது, சல்மான் கானின் டைகர் 3 படத்தில் ஷாருக் கேமியோவில் நடிப்பதாக யாஷ் ராஜ் பிலிம்ஸ் முடிவு செய்தது. பதான் படம் இம்மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

click me!