53 வயதில் கோடிகளில் சம்பளம்.. ஹீராமண்டி நடிகை மனிஷா கொய்ராலாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

First Published May 23, 2024, 2:01 PM IST

மனிஷா கொய்ராலாவின் சொத்து மதிப்பு, ஆடம்பரமான வாழ்க்கை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

1989-ம் ஆண்டு வெளியான பெரி பெடவுலா நேபாளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மனிஷா கொய்ராலா. 1991-ம் சௌதாகர் படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து பாலிவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் குவியத்தொடங்கியது.

மணிரத்னம் இயக்கத்தில் 1995-ம் ஆண்டு வெளியான பாம்பே படத்தின் மூலம் தமிழிலும் மனிஷா கொய்ராலா அறிமுகமானார். தொடர்ந்து இந்தியன், உயிரே, முதல்வன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார்.

தொடர்ந்து பாலிவுட்டில் பல வெற்றி படத்தில் நடித்த மனிஷா கொய்ராலா, சஞ்சய் லீலா பன்சாலியின்  ஹீரமாண்டியில் மல்லிகாஜான் என்ற முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்,  இது தற்போது நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாகிறது. இந்தத் தொடர் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், கொய்ராலாவின் நடிப்புக்கு ரசிகர்கலும் விமர்சகர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஹிந்தி, தமிழ் தவிர பெங்காலி, மலையாளம், கன்னடம் மற்றும் நேபாளி திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது புகழ்பெற்ற வாழ்க்கை ஒரு நடிகையாக அவரது திறமைகள் மற்றும் பல்துறைத்திறனுக்கு ஒரு சான்றாகும். மனிஷா கொய்ராலாவின் சொத்து மதிப்பு, ஆடம்பரமான வாழ்க்கை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மனிஷா கொய்ராலா ஒரு வசதியான அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். இவர் நேபாள பிரதமராக பதவி வகித்த பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலாவின் பேத்தி ஆவார். இவரது தந்தை, பிரகாஷ் கொய்ராலா, நேபாளத்தின் முன்னாள் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்தவர். இவர், நேபாளத்தில் அறியப்பட்ட அரசியல் பிரமுகர் ஆவார்.

மணிஷா கொய்ராவுக்கு நேபாளத்தில் அழகான வீடு உள்ளது. அவர் தனது குடும்பத்துடன் சில தரமான நேரத்தை செலவிடவும்,  இயல்பான வாழ்க்கையை அனுபவிக்கவும் இது ஒரு சிறந்த இடமாக அமைகிறது.

சஞ்சய் லீலா பன்சாலியின் ஹீரமண்டி சீரிஸில் மல்லிகாஜானாக நடிக்க மனிஷா கொய்ராலா ரூ. 1 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. கார்த்திக் ஆர்யன் மற்றும் க்ரிதி சனோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த ஷேஹ்சாதா (2023) படத்தில் நடிக்கவும் அவர் ரூ. 1 கோடி சம்பளம் பெற்ருள்ளார்.

ஓய்வு நேரத்தில், மனிஷா கொய்ராலா பயணம் செய்ய விரும்புவதாகவும். சாகசப் பயணங்கள் மற்றும் கவர்ச்சியான இடங்களை அவருக்கு ஆர்வம் அதிகம். இதுதொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

2010-ம் ஆண்டு சாம்ராட் தாஹல் என்ற நேபாள தொழிலபதிபரை மனிஷா கொய்ராலா திருமணம் செய்து கொண்டார். எனினும் இந்த 2012-ம் இந்த தம்பதி விவாகரத்து செய்துவிட்டது. தற்போது 53 வயதாகும் மனிஷா கொய்ராவில் சொத்து சுமார் 100 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2012-ம் ஆண்டு மனிஷா கொய்ராலா கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார், பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டார். புற்றுநோயை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற பிறகு, நோய் குறித்த விழிப்புணர்வை தீவிரமாக ஏற்படுத்தி வருகிறார்.

2020-ம் ஆண்டு காத்மாண்டுவின் குளோபல் காலேஜ் இன்டர்நேஷனல் ஆதரவுடன் "மனிஷா கொய்ராலா புற்றுநோய் கல்வி நிதியை" தொடங்கினார், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!