உச்சத்தில் நீடிக்கும் தக்காளி, இஞ்சி, பூண்டு விலை.!! காய்கறி சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் விலை என்ன தெரியுமா.?

First Published Jun 12, 2024, 9:32 AM IST

காய்கறிகளின் விலை கடந்த சில வாரங்களுக்கு முன்பு சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தக்காளி, வெங்காயம், இஞ்சி, அவரைக்காய்,பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. 
 

பீன்ஸ் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 55 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
 

வெண்டைக்காய் விலை என்ன.?

கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Omni Bus: ஜூன் 14ம் தேதி வரைக்கும் தான் டைம்! இந்த ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை!
 

இஞ்சி விலை என்ன.?

பச்சை மிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு வாழைக்காய் 1 5 ரூபாய்க்கு சௌசௌ ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் இஞ்சி ஒரு கிலோ 110 ரூபாய்க்கும் காலிபிளவர் ஒன்று 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

vegetable price hike

பூண்டு விலை என்ன.?

கோவக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் மாங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு பூண்டு ஒரு கிலோ 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

3 நாட்கள் தொடர் விடுமுறை.. வெளியூருக்கு போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு.! எந்த எந்த ஊருக்கு தெரியுமா.?
 

Latest Videos

click me!